இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 23 வயதுக்குட்பட்ட உள்ளூர் கழக அணிகளின் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தும் மேஜர் யூத் கிரிக்கெட் தொடரில் இன்று (20) மொத்தமாக 11 போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
>>இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராகும் ரங்கன ஹேரத்<<
இன்று இடம்பெற்ற போட்டிகளில் குழு D இற்கான மோதல் ஒன்றில் கொழும்பு SSC கழகம், காலி கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக வெற்றி பெற்று இந்த தொடரில் தமது மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்தது. SSC அணியின் வெற்றிக்காக துடுப்பாட்டத்தில் நுவனிது பெர்னாந்து சதம் (108) பெற்று உதவ, இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலன பெரேரா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி பங்களிப்புச் செய்தார்.
மற்றுமொரு போட்டியில், மொஹமட் சமாஸ் பெற்றுக் கொண்ட 90 ஓட்டங்களுடனும், பசிந்து சூரியபண்டார (57), டினுக்க டில்ஷான் (53) ஆகியோரின் அரைச்சதங்களுடனும் சோனகர் கிரிக்கெட் கழக அணி இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்கு எதிராக 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதேவேளை NCC அணி தினேத் ஜயக்கொடி (78), கலன விஜேசிரி (50) ஆகியோர் பெற்ற அரைச்சதங்களுடன் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்து, இந்த தொடரில் தமது அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்துகொள்கின்றது.
இதேநேரம் களுத்துரை நகர கழகம் மற்றும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் அணிகள் இடையில் நடைபெற்ற த்ரில்லர் மோதலில், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் ஒரு விக்கெட்டினால் அபார வெற்றியினைப் பதிவு செய்தது. கோல்ட்ஸ் அணியினை வெற்றியினை தேசிய கிரிக்கெட் அணி வீரரான அவிஷ்க பெர்னாந்து அரைச்சதம் (58) பெற்று உறுதி செய்தார்.
இப்போட்டிகள் தவிர இன்றைய நாளில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், லங்கன் கிரிக்கெட் கழகம், புளூம்பில்ட், விமானப்படை, BRC, இராணுவப்படை மற்றும் பதுரெலிய கிரிக்கெட் கழகம் ஆகியவை வெற்றிகளைப் பதிவு செய்த ஏனைய அணிகளாக மாறியிருந்தன.
>>Video – பங்களாதேஷ் – இலங்கை மற்றும் LPL தொடர்கள் நடைபெறுவதில் சந்தேகம்? | Cricket Kalam 46<<
போட்டிகளின் சுருக்கம்
புளூம்பில்ட் கி.க. எதிர் கண்டி சுங்க வி.க.
(புளூம்பில்ட் மைதானம், கொழும்பு)
புளூம்பில்ட் கிரிக்கெட் கழகம் – 182 (46.5) நிபுன் ஹக்கல 68, இமான் இமேஷ் 2/05, நுவான் மதுஷங்க 2/44
கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 123 (30.3) சசித் மனுரங்க 51, திமிர மல்ஷான் 41, திலிப ஜயலத் 3/11
முடிவு – புளூம்பில்ட் கிரிக்கெட் கழகம் 27 ஓட்டங்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்
(P. சரவணமுத்து மைதானம், கொழும்பு)
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 214/6 (50) மலிந்து மதுரங்க 49, சமிந்து விஜேசிங்க 41*, ரவிந்து பெர்னாந்து 2/34
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 184/7 (40.1) நவோத் பரணவிதான 58, சுவாத் மெண்டிஸ் 4/23
முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி
SSC எதிர் காலி கிரிக்கெட் கழகம்
(SSC மைதானம், கொழும்பு)
SSC – 298/5 (50) நுவனிது பெர்னாந்து 108, அஷேன் பண்டார 93*, குஷான் மதுஷ 2/56
காலி கிரிக்கெட் கழகம் – 66/8 (25.4) பவேன் சந்தேஷ் 27, கலன பெரேரா 4/22
முடிவு – SSC 199 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டு கழகம்
சோனகர் விளையாட்டுக் கழக மைதானம், கொழும்பு
சோனகர் விளையாட்டுக் கழகம் – 266/8 (50) மொஹமட் சமாஸ் 90, பசிந்து சூரியபண்டார 57, டினுக்க டில்ஷான் 53, சங்க பூர்ணா 5/46
இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 172 (47.1) ரஷ்மிக்க மேவன் 63, பிரவீன் ஜயவிக்ரம 3/23, கவிஷ்க அஞ்சுல 3/28
முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 94 ஓட்டங்களால் வெற்றி
NCC எதிர் சரசென்ஸ் வி.க.
(NCC மைதானம், கொழும்பு)
NCC – 248/7(50) தினேத் ஜயக்கொடி 78, கலன விஜேசிரி 50, கவிந்து டில்ஹார 2/59
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 81/5 (30) நவிந்து நிர்மால் 30, சாமிக குணசேகர 2/06
முடிவு – NCC அணி 87 ஓட்டங்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)
களுத்துறை நகர கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
(கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம்)
களுத்துறை நகர கழகம் – 205/9 (50) ருவின் பீரி்ஸ் 50, நிப்புன் ரன்சிக்க 3/23, ரொஹான் சஞ்சய 3/47
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 160/9 (34.5) அவிஷ்க பெர்னாந்து 58, லசிந்து ஆரோஷன 4/41
முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 1 விக்கெட்டினால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)
றாகம கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை வி.க.
(விமானப்படை மைதானம், கட்டுநாயக்க)
றாகம கிரிக்கெட் கழகம் – 185 (43.1) மனிஷ ரூபசிங்க 72, யோகன் லியனகே 47, ரவிந்து செம்புகுத்திகே 3/25
விமானப்படை விளையாட்டு கழகம் – 175/7 (46) அசின்த மல்ஷான் 41, டெல்லோன் பீரிஸ் 3/21
முடிவு – விமானப்படை 3 விக்கெட்டுகளால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)
சிலாபம் மேரியன்ஸ் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்
(MCG, கட்டுநாயக்க)
லங்கன் கிரிக்கெட் கழகம் – 197 (40.3) விஷ்வ சத்துரங்க 55, லசித் குரூஸ்புள்ளே 4/20
சிலாபம் மேரியன்ஸ் – 80 (27) துனித் வெலால்கே 3/16
முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 117 ஓட்டங்களால் வெற்றி
செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC
செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 211/9 (50) சச்சின் பெர்னாந்து 48, மிலிந்த அபிஷேக் 3/54
BRC – 160/3 (27.1) யெசித் ரூபசிங்க 60
முடிவு – BRC கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளல் வெற்றி
பொலிஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்
(இராணுவப்படை மைதானம், பாணகொட)
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 204/9 (50) ஹரித் பெர்னாந்து 65, மொஹமட் பஹீம் 3/36
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 100/7 24) மகேஷ் தீக்ஷன 2/07
முடிவு – இராணுவப்படை 60 ஓட்டங்களால் வெற்றி (டகவெல்ஸ் லூயிஸ் முறையில்
கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்
(கடற்படை மைதானம், வெலிசர)
கடற்படை விளையாட்டுக் கழகம் – 188/9 (50) பாக்யா திஸநாயக்க 76, மலிந்த ஜயோத் 4/25
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 125/4 (23.4) நிஷந்த அபிலாஷ் 47, சமித ரங்கா 1/56
முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டினால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<