வங்கதேச வீரர் சயிப் ஹஸனுக்கு மீண்டும் கொவிட் – 19 வைரஸ்

178
getty image

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சயிப் ஹஸனுக்கு இரண்டாவது தடவையாகவும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

இதற்காக 27 பேர் கொண்ட தற்காலிக டெஸ்ட் குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் சயிப் ஹசன் தேர்வாகவில்லை. 

இந்த நிலையில், இலங்கை தொடருக்கு தயாராகும் நோக்கில் ஏழு நாட்களுக்கு முன்பு கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட சயிப் ஹனுக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு கொவிட்-19 தொற்று

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து சயிப் ஹசன் குணமாகிவிட்டால் பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 21 வயதுடைய சயிப் ஹஸன், கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் இடம்பிடித்திருந்தார். 

எனினும், அவருக்கு அந்தத் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<