இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான டோனி ஒபதா, இன்று (11) தன்னுடைய 73ஆவது அகவையில் காலமானர்.
>> சிக்ஸர் அடித்து பேரூந்தின் கண்ணாடியை உடைத்த ரோஹித் சர்மா
வலதுகை வேகப்பந்துவீச்சாளரான டோனி ஒபதா, இலங்கை அணியினை 1975ஆம், 1979ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணங்களில் பிரதிநிதித்துவம் செய்து மொத்தமாக 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக் காலங்களில் புனித பேதுரு கல்லூரி அணிக்காக கிரிக்கெட் விளையாடிய டோனி ஒபதா, 1970களின் பிற்பகுதிகளில் அயர்லாந்துக்குச் சென்று கழக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார்.
இதன் பின்னர் 1980களின் ஆரம்பபகுதியில் தடை செய்யப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணியுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் வீரராகவும் டொனி ஒப்பத்தா இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுற்றுப்பயணத்தினை மேற்கொண்ட அவருக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதித்திருந்தது.
அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை 2018ஆம் ஆண்டில் டொனி ஒபதாவினை இலங்கை ஐ.சி.சி. இன் முழு அங்கத்தவராக மாறுவதற்கு முன்னர் தாயக கிரிக்கெட் அணிக்கு சேவையாற்றிய வீரர்களில் ஒருவர் எனவும் கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மற்றொரு இக்கட்டான சூழ்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ்
டொனி ஒபதாவின் மரணத்திற்கு ThePapare.com உம் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<