வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண காலிறுதிப் போட்டி விபரம்

392

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டியில் எதிர்த்து ஆடவுள்ள அணிகள் இன்று (20) குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. இதில் A குழுவில் முதலிடம் பிடித்த ஜாவா லேன் அணி C குழுவில் பலத்தை வெளிப்படுத்திய டிபென்டர்ஸ் கழகத்தை எதிர்கொள்ளவிருப்பதோடு கொழும்பு கால்பந்து கழகம், பொலிஸ் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது. 

கொழும்பு கழகத்தை வீழ்த்தி முன்னிலை பெற்றது புளூ ஈகள்ஸ்: SLTB முதல் வெற்றி

காலிறுதிப் போட்டிகளில் ஆடும் அணிகளை பிரிக்கும் குலுக்கல் முறை இலங்கை கால்பந்து சம்மேளனத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. காலிறுதிக்குத் தெரிவான எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரித்து எதிர்த்து ஆடும் அணிகள் தேர்வு செய்யப்பட்டன. 

இதில் குழு நிலையில் வேறு எந்த அணியை விடவும் தனது மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டி 9 புள்ளிகளுடன் E குழுவில் முதலிடத்தைப் பிடித்த புளூ ஈகல்ஸ் அணி காலிறுதியில் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது. 

ரெட் ஸ்டார் அணி காலிறுதியில் செரண்டிப் விளையாட்டுக் கழகத்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெறும் பிரதான கால்பந்து தொடராக கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி ஆரம்பிமான வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண தொடரின் ஆரம்பச் சுற்றில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. 

ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற போட்டிகளில் ரினௌன், சௌண்டர்ஸ், ரட்னம் போன்ற முக்கிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறின.

புளு ஸ்டார், அப் கண்ட்ரியை அதிரடியாக வென்ற ஜாவா லேன், மொரகஸ்முல்ல

எனினும் குழு நிலைப் போட்டிகளில் A குழுவில் மொத்தம் ஏழு புள்ளிகளுடன் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் முதலிடத்தைப் பிடித்தது. அந்த அணி தனது குழுவில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையை பெற்றது. அந்த அணி புளூ ஸ்டார் மற்றும் மொரகஸ்முல்ல விளையாட்டுக் கழகத்தை இலகுவாக வென்ற ஜாவா லேன், அப் கன்ட்ரி லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை சமன் செய்தது. அந்த அணி தமது குழுவில் மொத்தம் 8 கோல் வித்தியாசத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம் A குழுவில் இருந்து ஒரே அணியாக ஜாவா லேன் காலிறுதிக்கு முன்னேறியது. 

பெரிதும் எதிர்பார்க்கப்படாத அணியாக இந்தத் தொடரில் களமிறங்கிய நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் B குழுவில் தமது பலம்மிக்க போட்டி அணிகளான ரினௌன் விளையாட்டுக் கழகம் மற்றும் வென்னப்புவ நியூ யங்ஸ் கழகத்தை வீழ்த்தியதோடு மாத்தறை சிட்டி அணியுடனான போட்டியை சமன் செய்தது. 

இதன்மூலம் தமது குழுவில் ஏழு புள்ளிகளை பெற்று நான்கு கோல் வித்தியாசத்துடன் காலிறுதிக்கு முன்னேற நியூ ஸ்டார் அணியால் முடிந்தது.  

ஒரு பரபரப்பான குழுவாக மாறிய C குழுவில் இருந்து டிபென்டர்ஸ் மற்றும் ரெட் ஸ்டார் கால்பந்து கழகத்தால் காலிறுதிக்கு முன்னேற முடிந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் ரெட் ஸ்டார் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமே டிபென்டர்ஸ் அணியால் தனது காலிறுதியை உறுதி செய்ய முடிந்தமை குறிப்பிடத்தக்கது.  

ரெட் ஸ்டார் மற்றும் சுப்பர் சன் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் வெற்றியீட்டிய சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியை சமன் செய்த டிபென்டர்ஸ் அணி தனது குழுவில் முதலிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Video – அதிரடி மாற்றங்களுக்கு காத்திருக்கும் BARCELONA !| FOOTBALL ULLAGAM

D குழுவில் இருந்து பொலிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் செரண்டிப் விளையாட்டுக் கழகம் முதலிரு இடங்களை பெற்று கடைசி நான்கு அணிகளில் இடம்பிடித்தன. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செரண்டிப் அணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் பரபரப்பு வெற்றி ஒன்றை பெற்ற பொலிஸ் அணி தமது குழுவில் முதலிடத்தை பிடித்தது.   

எனினும் செரண்டிப் அணி சீ ஹோக்ஸ் கால்பந்து கழகத்துடன் தலா நான்கு புள்ளிகளை பகிர்ந்துகொண்ட நிலையில் கோல் வித்தியாசத்தில் காலிறுதிக்கு முன்னேற அதிர்ஷ்டம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

E குழுவில் கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் புளூ ஈகல்ஸ் பெரிதாக நெருக்கடி இன்றி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டன. 

இதன்படி காலிறுதிப் போட்டிகள் வரும் ஓகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெறவுள்ளதோடு தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது. சம்பியன் அணியை தேர்வு செய்யும் இறுதிப் போட்டி ஓகஸ்ட் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

காலிறுதிப் போட்டிகளின் விபரம்

23 ஓகஸ்ட் 2020

பி.ப. 4.00

ஜாவா லேன் வி.க. எதிர் டிபென்டர்ஸ் கா.க.
23 ஓகஸ்ட் 2020

இரவு 7.00

புளூ ஈகல்ஸ் வி.வ. எதிர் நியூ ஸ்டார் வி.க.
24 ஓகஸ்ட் 2020

பி.ப. 4.00

கொழும்பு கா.க. எதிர் பொலிஸ் வி.க.
24 ஓகஸ்ட் 2020

இரவு 7.00

ரெட் ஸ்டார் கா.க. எதிர் செரண்டிப் வி.க.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<