கொழும்பு கழகத்தை வீழ்த்தி முன்னிலை பெற்றது புளூ ஈகள்ஸ்: SLTB முதல் வெற்றி

304

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண தொடரின் குழு நிலைப் போட்டிகள் இன்று (19) முடிவடைந்தன. E குழுவுக்காக இன்று (19) நடந்த கடைசி இரு போட்டிகளில் கொழும்பு கால்பந்து கழகத்தை புளூ ஈகள்ஸ் அணி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கிறஸ்டல் பலஸ் அணியை SLTB அணி 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் வெற்றியீட்டின.

கொழும்பு கா.க. எதிர் புளூ ஈகள்ஸ் வி.க.

கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆரம்பம் தொடக்கம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய புளூ ஈகள்ஸ் வீரர் கவிந்து இசான் 18 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்குள் இருந்து அபார கோல் ஒன்றை பெற்று அணியை முன்னிலை பெறச்செய்தார். தொடர்ந்து 21 ஆவது நிமிடத்தில் மீண்டும் செயற்பட்ட கவிந்து பெனால்டி பெட்டிக்கு வெளியே இருந்து எதிரணி கோல் காப்பாளரை முறியடித்து இரண்டாவது கோலை புகுத்தினார். 

சீ ஹோக்கிற்கு அதிர்ச்சி கொடுத்த ரட்னம்: காலிறுதியில் பொலிஸ், டிபெண்டர்ஸ்

முதல் பாதியில் பின்னடைவை சந்தித்த கொழும்பு கால்பந்து கழகம் 60 ஆவது நிமிடத்தில் வைத்து சர்வான் ஜோஹார் மூலம் கோல் ஒன்றை புகுத்தியபோதும் ஓப் சைட் காரணமாக அந்த கோல் மறுக்கப்பட்டது. இதனால் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் பெறவில்லை. 

இதன் மூலம் இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி தமது குழுவில் முன்னிலை பெறுவதற்கு புளூ ஈகள்ஸ் அணியால் முடிந்தது. 

முழு நேரம்:  கொழும்பு கா.க. 0 – 2 புளூ ஈகள்ஸ் வி.க. 

கோல் பெற்றவர்கள்

  • புளூ ஈகள்ஸ் வி.க – கவிந்து இஷான் 18’ & 21’

காலிறுதியில் ஜாவா லேன், நியூ ஸ்டார்: ரினௌன் அணிக்கு முதல் வெற்றி

கிறிஸ்டல் பலஸ் கா.க எதிர் SLTB வி.க

குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 17 ஆவது நிமிடத்தில் கோல் எல்லைக்கு அருகில் கிடைத்த பந்தை கச்சிதமாக வலைக்குள் செலுத்தி போட்டியில் முதல் கோலை கிறிஸ்டல் பலஸ் வீரர் ஐசாக் அபா பெற்றார். தொடர்ந்து 45 ஆவது நிமிடத்தில் சிறிஸ்டல் பலஸ் வீரர் செயிட் பெற்றுக்கொடுத்த பந்தை கச்சிதமாக கோலாக மாற்றினார் மஹதி அஸ்மில். 

முதல் பாதியில் பின்னடைவை சந்தித்த SLTB இரண்டாவது பாதியில் ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியது. போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளை 86 ஆவது நிமிடத்தில் சன்முகராஜா சஞ்சீவ் SLTB அணிக்கு முதல் கோலை பெற்றார். தொடர்ந்து இரண்டு நிமிடங்களில் பந்தை தலையால் முட்டி நிஸ்சங்க ஜயவீர அந்த அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.   

பார்சிலோனா பயிற்சியாளர் செட்டியன் அதிரடி நீக்கம்

அந்த கோல் பெற்ற பின் விறுவிறுப்படைந்த போட்டியில் 89 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு ஒன்றை பெற்ற SLTB அணி அதனை கோலாக மாற்றி வெற்றியை உறுதி செய்தது. அந்த கோலை நிஸ்சங்க ஜயவீர பெற்றார். இதன் மூலம் 3-2 என SLTB அணி போட்டியில் வெற்றியீட்டியது. 

இந்தத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. 

முழு நேரம்: கிறிஸ்டல் பலஸ் கா.க 02 – 03 SLTB வி.க

கோல் பெற்றவர்கள்:

  • கிறிஸ்டல் பலஸ் கா.க. – ஐசாக் அபா 17’, மஹதி அஸ்மில் 45’
  • SLTB வி.க. – சன்முகராஜா சஞ்சீவ் 86’, நிஸ்சங்க ஜயவீர 88’, 89’ (பெனால்டி)

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<