பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு என்ன நடந்தது?

212
Stuart Broad
@Getty Image

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் ப்ரோட், மூச்சுத்திணறலை சரி செய்வதற்கு இன்ஹேலர் (Inhaler) பயன்படுத்திய காட்சி ஊடகங்கள் வாயிலாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது

>> தன் வாயால் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட்

சவுதாம்ப்டனில் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி, முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணிக்காக 4ஆவது ஓவரை வீசிய ஸ்டுவர்ட் ப்ரோட், சுவாசிப்பதில் சற்று சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.  

ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் இருப்பதால், இன்ஹேலர் கொண்டு வருமாறு கேட்டார். இதற்கு சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இன்ஹேலர் கொண்டுவரப்பட்ட பிறகு அவர் தொடர்ந்து மைதானத்தில் இருந்தார்.

34 வயதான ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு ஆஸ்துமா நோய் இருப்பது ஆரம்பத்தில் எவருக்கும் தெரியாது. ஆனால் 2015இல் நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின் போது சக வீரரிடம் முதல்தடவையாக அதனைத் தெரிவித்துள்ளார்

அந்த நேரம் தனக்கு ஆஸ்துமா நோய் இருப்பது பற்றி முதல்தடவையாக டெய்லி மெய்ல் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில்

”பிறக்கும் போது மிகவும் சிறு குழந்தையாக இருந்தேன். மூன்று மாத குறைப் பிரவசாமாக பிறந்ததால் எனது பக்க நுரையீரல் முழுவதும் வளரவில்லை. பாதி தான் இருந்தது

>> Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32

ஏறக்குறைய மரணத்தின் விளம்பு வரை சென்று மீண்டேன். இதனால் தான் நான் ஆஸ்துமா நோயினால் அவதிப்படுகிறேன். எனினும், ஒரு கிரிக்கெட் வீரராக இது என்னை பாதிக்கவில்லை. மற்றவர்களை விட அரைப்பங்கு குறைவான நுரையீரலுடன் இத்தனை வருடங்கள் கிரிக்கெட் விளையாடி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்துக்கு 12 நாட்கள் முன்பாகப் பிறந்த ஸ்டுவர்ட் ப்ரோட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவருடைய தந்தையான கிறிஸ் ப்ரோட், பல கஷ்டங்களையும் பல தியாகங்களையும் செய்தார்.

இறுதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஸ்டுவர்ட் ப்ரோட் மரணத்தில் விளிம்பு வரை சென்று உயிர் தப்பினார். இதில் குறிப்பாக, ப்ரோட்டின் உயிரைக் காப்பாற்றுவதில் முன்நின்று செயற்பட்ட ஜோன் என்ற வைத்தியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருடைய பெயரை ஸ்டுவர்ட் ப்ரோட்டின் பெயருடன் சேர்ப்பதற்கும் அவருடைய தந்தை நடவடிக்கை எடுத்தார்.

>> டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்றுக்குள் நுழைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்

எதுஎவ்வாறாயினும், தனக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை மற்றும் ஆஸ்துமா நோய் இருந்தும் சுமார் 14 வருடங்களாக ஒரு வேகப் பந்துவீச்சாளராக ஸ்டுவர்ட் ப்ரோட் ஜொலித்து வருகின்றார்.

அதிலும் குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக அண்மையில் நிறைவடைந்த 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுக்கள் மைல்கல்லை எட்டிய உலகின் 7ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<