இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொவிட் – 19 வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அதிக அளவில் பாதித்துள்ளன. இந்தியாவில் மார்ச் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. ஏப்ரல்–மே மாதத்தில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற உள்ளது.
பல விமர்சனங்களை ஏற்படுத்திய பவாத் ஆலம்
இந்தியாவில் தற்போது கொவிட் – 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்தியா வழமையான நிலைமைக்குச் செல்ல நீண்ட மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது இலங்கையை மாற்று இடமாக தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, அடுத்த வருட முற்பகுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.
ஆனால் இந்தியாவில் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் தொடர்ந்து நிலவுவதால் குறித்த டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127
அதேபோல, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடரும் கொவிட் – 19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரும் வெளிநாட்டில் நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளன.
இதனிடையே, இங்கிலாந்து அணி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருந்தது.
இந்தத் தொடருக்காக இலங்கை வந்த இங்கிலாந்து அணி பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடியிருந்தது.
எனினும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் தலைதூக்கத் தொடங்கியதால் இங்கிலாந்து அணி குறித்த தொடரை இரத்து செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்பியது.
புகைப்பட விவகாரம்: மீண்டும் பாக். குழாத்துடன் இணைந்த ஹபீஸ்
இதனையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட குறித்த தொடரை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
இதனால் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் குறிப்பாக, இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இலங்கையிலேயே தங்கி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு இலகுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறாயினும், இந்திய கிரிக்கெட் சபை சார்பில் இதுகுறித்து எந்தவொரு தகல்களையும் வெளியிடவில்லை.
அத்துடன், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கு இன்னும் காலம் இருப்பதால் இப்போதைக்கு அதுதொடர்பில் விவாதிக்க வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<