பாகிஸ்தான் உள்ளூர் போட்டியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு

703
pak terror
Getty Image

பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றை குறி வைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த போட்டியில் பங்குகொண்ட கிரிக்கெட் வீரர்கள், அரிசயல்வாதிகள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் இடைவிடாத துப்பாக்கி சூட்டின் சத்தத்தை கேட்டு அலறி அடித்துக் கொண்டு தப்பி ஓடியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பட்லர் – வோக்ஸ் இணைப்பாட்டத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து

பாகிஸ்தானில் கொவிட் – 19  வைரஸ் பாதிப்பு குறைவடையாத நிலையில், பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரகாசி மாவட்டம் கைபர் என்ற பகுதியில் ஏ.எம்.என் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றதுடன், பெருமளவு ரசிகர்களும் போட்டியைக் காண வந்துள்ளனர். 

போட்டி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் மைதானத்துக்கு அருகாமையில் உள்ள மலையில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனால் போட்டியைக் காண வந்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், போட்டியில் பங்கேற்ற வீரர்கள் என அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நாலா புறமும் ஓடியுள்ளனர்.  எனினும், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிரழப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த போட்டியை உடனடியாக இரத்து செய்ய ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து ஒரகாசி மாவட்டத்தின் தலைமைப் பொலிஸ் அதிகாரி நிசார் அஹ்மட் கருத்து வெளியிடுகையில், 

”துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து போட்டியைக் காண வந்த ரசிகர்கள் மைதானத்தை விட்டு ஓடியுள்ளனர். இந்தத் தாக்குதலை தீவிரவாத கும்பல் ஒன்று தான் மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126

எனவே இராணுவத்துடன் இணைந்து மேலதிக விசாரணைகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்” என அவர் கருத்து தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, குறித்த தீவிரவாத சம்பவத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிர்காலத்தில் சிக்கல்கள் எழலாம் என கருதப்படுகிறது. 

குறிப்பாக. தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முன்னதாக 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணியை குறி வைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது அதிர்ஷ்டவசமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உயிர் தப்பினாலும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட 8 அதிகாரிகள் உயிரிழந்தனர். 

இதனையடுத்து சுமார் பத்து வருடங்கள் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் தமது போட்டிகளை நடத்தியது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மிகப் பெரிய போராட்டத்துக்கு மத்தியில் கடந்த வருடம் இலங்கை அணி அங்கு சென்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடியது.

அதனைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதன் காரணமாக இனிவரும் காலங்களில் அனைத்து சர்வதேச அணிகளும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை கூறி வருகிறது.

சயீட் அன்வரின் 24 வருட சாதனையை முறியடித்த ஷான் மசூத்

இப்படியான ஒரு சூழலில் தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவம், அடுத்து பாகிஸ்தான் வரும் அணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். 

இது இவ்வாறிருக்க, குறித்த தீவிரவாத தாக்குல் தொடர்பில் விரைவில் விசாரணை நடத்தப்படும் என அந்தப் பகுதியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க