இனி வேண்டுமென்று இருமினாலும் சிவப்பு அட்டை

515

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் எதிரணி வீரர்கள் அல்லது நடுவரை நோக்கி வேண்டும் என்று இருமினால் சிவப்பு அல்லது மஞ்சள் அட்டை காண்பிப்பதற்கு இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் புதிய வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.  

கொரோனா தொற்று தொடர்பான அறிவுறுத்தல்கள் அமுலில் உள்ள நிலையில் இந்த புதிய வழிகாட்டல் அனைத்து மட்டத்திலான போட்டிகளிலும் உடன் நடைமுறைக்குக் கொண்டுவர நடுவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

லா லிகாவில் என்ன நடந்தது?

நடுவர்களுக்கான இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தின் ஆவணத்தில், ஒருவர் வேண்டுமென்றே நெருங்கிய தூரத்தில் எதிரணி வீரர் அல்லது போட்டி நடுவரின் முகத்தை நோக்கி இருமினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று குறிப்பிடப்பட்டுள்ளது

தாக்குதலில் ஈடுபடல், அவமதிப்பான அல்லது மோசமான வார்த்தை அல்லது சைகைதொடர்பான விதியின் கீழ் இந்த நடத்தை உட்படுத்தப்படும் என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த சம்பவம் வெளியேற்றுவதற்கு போதுமாக இருக்காத பட்சத்திலும், விளையாட்டுத் தன்மையற்ற நடத்தை, போட்டிக்கு போதிய மதிப்பளிக்காததாக கருதப்பட்டு எச்சரிக்கை விடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நடுவர்கள் வழக்கமான இருமலுக்காக தண்டிக்கக் கூடாது என்றும் மைதானத்தில் துப்புவதை தவிர்ப்பதற்கு வீரர்களை அறிவுறுத்த வேண்டும் என்றும் அது தவறான நடத்தை இல்லை என்றும் நடுவர்களுக்கான வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது

FFSL தலைவர் கிண்ணத்தோடு கைகோர்க்கும் வன்டேஜ்

அதேபோன்று, கோல் பெற்ற பின்னரான கொண்டாட்டங்களில் சமூக இடைவெளியை பேணுவது வீரர்களின் பொறுப்பு என்றும் போட்டி அதிகாரிகளுக்கு அதில் பொறுப்பு இல்லை என்றும் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தின் புதிய வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளது.   

இந்நிலையில் இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கின் அடுத்த பருவத்திலும் ஐந்து பதில் வீரர்களை பயன்படுத்தும் விதி தொடர்ந்து பின்பற்றப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அதிக பலு கொண்ட போட்டி அட்டவணை மற்றும் வீரர்கள் உடல்நிலை காரணமாகவே மூன்றுக்கு பதில் ஐந்து பதில் வீரர்களை பயன்படுத்துவதற்கு கால்பந்து நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது

2020/2021 இங்கிலாந்து ப்ரீமியர் லீக் பருவத்தை வரும் 2020 செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<