கொவிட் – 19 வைரஸ் தொடர்ந்து நீடித்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பேன் என்று அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு வருட போட்டித் தடையை சந்தித்த பிறகு மீண்டும் கிரிக்கெட் அரங்கில் அதிரடியாக விளையாட ஆரம்பித்துள்ள 33 வயதான டேவிட் வோர்னர் ESPNcricinfo இணையத்தளத்துக்கு அளித்த ஒரு பேட்டியின்போதே இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
இங்கிலாந்து தொடருக்கான உத்தேச குழாத்தை அறிவித்த ஆஸி.!
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”எனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கும் நான் நிறைய நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன். அவர்கள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள். எப்போதும் உங்கள் குடும்பத்தை பார்த்துகொள்வதற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இந்த இக்கட்டான தருணத்தில் இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் இது தான் எனது குறிக்கோளாகும். இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடக்கவிருந்த டி20 உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த தொடர் திட்டமிட்டபடி இங்கு நடந்து இருந்தால் நாங்கள் வெற்றி பெற்று இருந்து இருக்கலாம். அடுத்த வருடம் டி20 உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடந்தால் அங்கு செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரலாம்.
Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125
மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கப் போகிறது. எத்தனை போட்டிகளில் விளையாட போகிறோம் என்பது பெரிய விடயமல்ல. என்னை பொறுத்தமட்டில் குடும்ப நலனே முதலில் முக்கியம்.
கொவிட் – 19 உயிர் மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் விளையாடுவதில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதனால் குடும்பத்தை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்து இருக்க வேண்டியது வரும்.
எனவே தற்போதைய சூழ்நிலை நீடித்தால் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து (ஓய்வு பெறுவது) மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க