ஐக்கிய அரபு இராச்சியத்தில் இவ்வருடம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஐ.பி.எல் தொடரில் நேரடி ஒளிபரப்பின் போது, வீட்டில் இருந்து வர்ணனை செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொவிட் -19 வைரஸ் தாக்கம் காரணமாக கிரிக்கெட் விளையாட்டில் பல மாற்றங்களும், புதிய விதிமுறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக தற்போது நடைபெற்று வருகின்ற இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் கெமரா கலைஞர்களுக்குப் பதிலாக ரோபோ கெமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில். கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 3TC என்ற புதிய வகை கிரிக்கெட் தொடரானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்
இதன்போது பரோடாவில் இருந்து தீப் தாஸ் குப்தா, கொல்கத்தாவில் இருந்து இர்பான் பதான் மற்றும் மும்பையில் இருந்து சன்ஜேய் மஞ்சரேக்கர் உள்ளிட்ட மூவரும் தங்கள் வீட்டில் இருந்து நேரடி வர்ணனையில் ஈடுபட்டனர். இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.
இதன் காரணமாக ஏதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரிலும் இதே நடைமுறையை பின்பற்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் ஆங்கிலம், ஹிந்தியை தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுபோன்று வீட்டில் இருந்து நேரடியாக வர்ணனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124
இந்த நிலையில், 3TC கிரிக்கெட்டில் நேரடி வர்ணனையில் இணைந்துகொண்ட அனுபவம் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கருத்து வெளியிடுகையில்,
”ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சரியான முறையில் செயல்படுத்தும். 3TC கிரிக்கெட் கண்காட்சி போட்டியாக இருந்தாலும் நாங்கள் அதை பாரதூரமான ஒரு விடயமாக எடுத்துக் கொண்டு வர்ணனை செய்தோம்.”
My new commentary box:). #Newnormal #commentry #covidera pic.twitter.com/5bIkg8hFa1
— Irfan Pathan (@IrfanPathan) July 18, 2020
“அதேநேரம், ஐ.பி.எல் தொடரின் வர்ணனையை வீட்டில் இருந்து செய்வதென்பது மிகவும் சவாலான பணி” என்று அவர் தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<