கொவிட்-19 இலிருந்து மீண்ட காஷிப் பட்டி பாகிஸ்தான் அணியுடன் இணைவு

233

கொவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து மூன்றாவது தடவையாகவும் மீண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான காஷிப் பட்டிக்கு பாகிஸ்தான் அணியுடன் இணைந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகியதுமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

கொரோனாவிலிருந்து தேறிய 6 பாக். வீரர்கள் இங்கிலாந்து விஜயம்

இந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 T20i போட்டிகளில்  விளையாடுவதற்காக கடந்த ஜூன் 28ஆம் திகதி இங்கிலாந்து சென்றது

இந்த நிலையில், இங்கிலாந்து தொடருக்காக அறிவிக்கப்பட்ட 29 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 12 பயிற்சியாளர் குழுவினரிடம் அவரவர் வீடுகளுக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் முன்னாள் தலைவர் மொஹமட் ஹபீஸ், வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ், முன்னணி துடுப்பாட்ட வீரர் பக்கர்மான், சதாப் கான், காஷிப் பட்டி, புதுமுக வீரர் ஹைதர் அலி, ஹாரிஸ் ரவூப்  உட்பட 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

இதன் காரணமாக குறித்த 10 வீரர்களையும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லாமல் இளம் வீரர் சொஹைல் நசீர் மற்றும் மூசா கான் இருவரையும் மாற்று வீரர்களாக இணைத்துக் கொண்டு 20 பேர் கொண்ட அணியுடன் தனி விமானம் மூலம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குச் புறப்பட்டுச் சென்றது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 123

இந்த நிலையில், லாகூரில் வைத்து அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த 10 வீரர்களில் மொஹமட் ஹபீஸ், வஹாப் ரியாஸ், பக்கர்மான், சதாப் கான், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் ஹஸ்னைன் ஆகிய 6 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களும் பாகிஸ்தான் குழாத்துடன் சென்று இணைந்து கொண்டனர்.

அதன்பிறகு காஷிப் பட்டி, ஹைதர் அலி, இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் அணியின் மசாஜ் நிபுணர் மாலங் அலி ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் 3ஆவது அணியாக இங்கிலாந்தை சென்றடந்தனர்.

இதுஇவ்வாறிருக்க, தொடர்ந்து இரண்டு தடவைகள் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட காஷிப் பட்டி, அதிலிருந்து மீண்டு கடந்த 8ஆம் திகதி இங்கிலாந்து சென்றார்.

இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட், டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு

அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலும் காஷிப் பட்டிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் பாகிஸ்தான் அணி வீரர்களிடம் இருந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்

இந்த நிலையில், அவருக்கு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தான் அணியுடன் இணைந்துகொள்ள பாகிஸ்தான் அணி முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

பாகிஸ்தான் அணிக்காக எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடாத 33 வயதான இடதுகை சுழல் பந்துவீச்சாளரான காஷிப் பட்டி, 84 முதல்தர உள்ளூர் போட்டிகளில் விளையாடி 331 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க