இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பதவியிலிருந்து விலகிய மகேந்திரசிங் டோனி, திறமைமிக்க வீரர்களை விராட் கோஹ்லியிடம் விட்டுச்செல்லவில்லை என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர்களில் அதிகம் பாராட்டப்பட்டவரும், விமர்சிக்கப்பட்டவருமாக இருப்பவர் மகேந்திரசிங் டோனி. இவரின் தலைமையின் கீழ் இந்திய அணி உலகக் கிண்ணம், T20 உலகக் கிண்ணம் மற்றும் சம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை வென்றுள்ளது.
BCCI யின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஹேமங் அமின்
அத்துடன், 2013ம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் முதல் நிலையையும் அடைந்திருந்தது. எனினும், 2000ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய அணி புதிய வளர்ச்சியை பெற்றுக்கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சௌரவ் கங்குலியுடன், தொடர்ந்தும் டோனி ஒப்பிடப்பட்டு வருகின்றார்.
கங்குலி இந்திய கிரிக்கெட் வீரர்களிடத்தில் அச்சமின்றிய மனப்பான்மையை வளர்த்திருந்ததுடன், குறித்த காலப்பகுதியில் விளையாடிய யுவ்ராஜ் சிங், வீரேந்தர் செவாக், ஹர்பஜான் சிங், ஸஹிர் கான் மற்றும் அஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு சுதந்திரத்தை வழங்கியிருந்தார்.
இந்தநிலையில், மகேந்திரசிங் டோனி மற்றும் கங்குலி ஆகிய இருவரின் தலைமைத்துவத்தின் கீழும் கௌதம் கம்பீர் விளையாடியிருந்தார். இதில், கங்குலி தலைமைத்துவத்திலிருந்து விலகும் போது அதிகமான நட்சத்திர வீரர்களை அணிக்கு கொடுத்திருந்தார் எனவும், டோனி அவ்வாறு செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
“டோனி தலைமைத்துவத்திலிருந்து விலகும் போது, விராட் கோஹ்லிக்கு ரோஹித் சர்மா, தற்போது ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோரை தவிர போதுமான அளவு திறமைமிக்க வீரர்களை கொடுத்து செல்லவில்லை. அப்போது, தொடரை வென்றுக்கொடுக்கொடுத்த அதிக வீரர்கள் அணியில் இல்லை.
ஆனால், சௌரவ் கங்குலி நட்சத்திர வீரர்களை அணிக்கு வழங்கி சென்றிருந்தார். இரண்டு உலகக் கிண்ணங்களில், தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்ற யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஸஹிர் கான், வீரேந்தர் ஷெவாக் ஆகிய வெற்றி நாயகர்களை அணிக்கு வழங்கியிருந்தார்” என கம்பீர் குறிப்பிட்டார்.
சௌரவ் கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கி 21 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 2002ம் ஆண்டு நெட்வெஸ்ட் தொடர் வெற்றியையும், 2003ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு அணியை தகுதி பெறவும் செய்திருந்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<