உலகக் கிண்ணம் வென்றால் திருமணம் முடிப்பேன் – ரஷீட் கான்

1545

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற பிறகே தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீட்  கான் தெரிவித்துள்ளார்.   

கடந்த 2015ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியில் அறிமுகமான ஷீட் கான், ஆப்கானிஸ்தான் அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்து வருவதோடு, சமகால கிரிக்கெட் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும், T20 பந்துவீச்சாளர்களில் நம்பர் 1 பந்துவீச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்.  

CPL வீரர்கள் வரைவில் விலைபோகாத இலங்கை வீரர்கள்

அண்மைக்காலமாக பந்துவீச்சில் மட்டுமல்லாமல், துடுப்பபாட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும் 21 வயதான ஷீட் கான், ஆப்கானிஸ்தான் அணியின் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் எதிர்கால தலைவராக பார்க்கப்படுகிறார்.

தனது அபரிமிதமான திறமையால் உலகின் பல்வேறு T20 லீக் தொடர்களில் இடம் பெற்றார் ஷீட் கான். .பி.எல் தொடரிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்

எனவே, அவர் விளையாடாத கிரிக்கெட் லீக்கே இல்லை என கூறும் அளவுக்கு பல கிரிக்கெட் லீக் தொடர்களில் இடம்பெற்றுள்ளார்

இதனிடையே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கு ஷீட் கானின் பங்களிப்பு முக்கியமாக இருந்து வருகின்றதை மறுக்க முடியாது. இதனால் அவரை வைத்தே ஆப்கானிஸ்தான் அணி சுழல் பந்துவீச்சாளர்களை மையமாகக் கொண்ட அணியாக மாறியது

இந்த நிலையில், ஷீட் கான் ஆப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த பின்னரே தான் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் செய்து கொள்வேன் என ஆப்கானிஸ்தானின் ஆசாதி வானொளிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 122

ஆனால், அது T20 உலகக் கிண்ணத்தையா அல்லது ஒருநாள் உலகக் கிண்ணத்தையா என்பது குறித்து ஷீட் கான் தெளிவாக கூறவில்லை

ஆப்கானிஸ்தான் அணிக்காக இதுவரை 7 டெஸ்ட், 67 ஒருநாள் போட்டிகள், 48 T20i போட்டிகளில் விளையாடியுள்ள ஷீட் கான், ஒட்டுமொத்தமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.   

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணியாக உள்ள ஆப்கானிஸ்தான், கடந்த 2015, 2019 என இரண்டு உலகக் கிண்ணத் தொடரில் தான் பங்கேற்றுள்ளது. இதில் 15இல் போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்றது

எனவே, உலகக் கிண்ணத்தை வென்றால் தான் திருமணம் என ஷீட் கான் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க