உலகின் அதிவேக ஓட்ட வீரராகத் திகழும் உசைன் போல்ட், மீண்டும் தான் மெய்வல்லுனர் அரங்கில் களம் இறங்குவேன் என்று அறிவித்துள்ளார்.
உலகின் மின்னல் ஓட்ட வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களையும், உலக மெய்வல்லுனரில் 11 தடவைகள் சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தார்.
மகளுக்கு மின்னல் என பெயரிட்ட உசைன் போல்ட்
அத்துடன், 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது.
இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு மெய்வல்லுனர் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற 33 வயதான உசேன் போல்ட் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில்,
“எனது பயிற்சியாளர் கிளென் மில்ஸ் மீண்டும் என்னிடம் வந்து, மெய்வல்லுனர் போட்டியில் களமிறங்கும் படி (மறுபிரவேசம்) சொன்னால், அதற்கு தயார். ஏனெனில் அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
நாம் இதை செய்யப்போகிறோம் என்று அவர் கூறினால், அது சாத்தியமே என்பதை அறிவேன். எனவே, அவர் என்னை மெய்வல்லுனர் விளையாட்டுக்கு அழைத்தால் மறுபடியும் களமிறங்க தயார்” என்றார்.
சமூக ஊடகத்தில் வைரலான போல்ட்டின் ‘சமூக விலகல்’ புகைப்படம்
இதனிடையே, உசைன் போல்ட்– காசி பென்னட் தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே அப்பாவாக தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட போல்ட்,
“வாழ்க்கையில் ஒரு தந்தையாக நிறைய மாற்றிக்கொள்ள வேண்டி உள்ளது. எனது மகள் பிறந்த முதல் வாரத்தில் தூங்குவேன் என்று பயந்ததால் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் எனது மகளை இரவு முழுவதும் பார்த்துக் கொண்டேன்.
உண்மையில் நான் அதிக நேரம் தூங்குவேன். தற்போது அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள கற்றுக் கொண்டேன். இது, ஒரு உலக சாதனையை படைப்பதை விட கடினம்” என்றும் உசைன் போல்ட் வேடிக்கையாக குறிப்பிட்டார்.
மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க