உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கலகெதர விடுவிப்பு

385

இலங்கை தேசிய கால்பந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மஹிந்த கலகெதரவை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) விடுவித்துள்ளது.  

இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இலங்கை கால்பந்து சம்மேளனம் கூறியிருப்பதாவது,

மாத்தறை சிட்டி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பகீர் அலி

இலங்கை கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் நிஸாம் பக்கீர் அலியை, மாத்தறை சிட்டி…

“2020 ஜூலை 8 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில்   இலங்கை தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளரை அந்தப் பதவியில் இருந்து இலங்கை கால்பந்து சம்மேளனம் விடுவிக்கிறது. அவர் பொலிஸ் விளையாட்டுக் கழகத்துடன் இணையவுள்ளார். 

மஹிந்த கலகெதரவினால் தமது நேரத்தை முகாமைத்துவம் செய்வது கடினமாக இருப்பதாலும் ஓர் அணியின் அதிகாரியாக இருக்க வேண்டும் என்ற கால்பந்து சம்மேளனத்தின் கொள்கைக்கு கட்டுப்பட்ட நிலையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும் இந்த முடிவு கால்பந்து சம்மேளனத்தினால் எடுக்கப்பட்டது என்று ஆரம்பித்தில் குறிப்பிட்ட நிலையில் இந்த முடிவு மஹிந்த கலகெதரவினால் எடுக்கப்பட்டது என்று பின்னர் குறிப்பிட்டிருப்பது இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கலகெதர தற்போதைய FA கிண்ண சம்பியனான பொலிஸ் விளையாட்டுக் கழகத்தில் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார். 

Video – வெற்றிப்பாதையில் BARCA, விட்டுக் கொடுக்காத MADRID | FOOTBALL ULLAGAM

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், இந்த பருவகாலத்தில் 9 ஆவது தோல்வியை அடைந்த மன்செஸ்டர் சிட்டி…

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் விதிகளின்படி, தேசிய அணி பயிற்சியாளர் ஒருவர் கழகம் ஒன்றின் பயிற்சியாளர் கட்டமைப்பில் அங்கம் வகிக்க முடியாது. எனவே, கலகெதர கழகம் ஒன்றில் இணைந்திருக்கும் நிலையில் அவரை உதவிப் பயிற்சியாளராக இலங்கை கால்பந்து சம்மேளனம் நியமித்தது கேள்வியை எழுப்பியுள்ளது. 

இலங்கை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் அமிர் அலகிக்குடன் இருந்து கொண்டே பொலிஸ் அணிக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க கலகெதர அனுமதி கோரியபோதும் அது நிராகரிக்கப்பட்டதாக ThePapare.com இற்கு தெரியவருகிறது.

மேலும் கால்பந்து செய்திகளை படிக்க