கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில் மெல்ல மெல்ல குறைவடையத் தொடங்கியதை அடுத்து சுமார் நான்கு மாதங்களாக மூடப்பட்ட நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த ஜுன் மாதம் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய விளையாட்டு விழாவை ஆகஸ்ட் முதல் நடத்த தீர்மானம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 46ஆவது தேசிய விளையாட்டு…
இந்த நிலையில், பாடசாலை மாணவர்களின் கல்விக்கு மாத்திரம் எஞ்சியுள்ள மாதங்களில் அதிக கவனம் செலுத்ததுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதால், மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற விளையாட்டு உள்ளிட்ட அனைத்து மேலதிக செயற்பாடுகளையும் இவ்வருடம் இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வருடந்தோறும் நடத்தப்படுகின்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் முதல் கட்டமான வலய மற்றும் மாகாண மட்டப் போட்டிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.
இதன் காரணமாக, பெரும்பாலான பாடசாலைகளில் நடத்தப்படவிருந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளும் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1984 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவானது ஒரு வருடத்துக்கு ஒரு தடவை தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழா என அப்போதைய கல்வி அமைச்சின் விளையாட்டு பணிப்பாளராக இருந்த சுனில் ஜயவீர மற்றும் ஒலிவியா கமகேவால் ஒழுங்கு செய்யப்பட்டன.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121
சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகும்வரை பயிற்சிகளை தொடங்கிய இலங்கை கிரிக்கெட் மற்றும்…
அத்துடன், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் பதக்கம் வெல்கின்ற அனைத்து வீரர்களுக்கும் பல்கலைக்கழகம் நுழைவதற்கு ஒரு போனஸ் புள்ளி வழங்கப்படும். ஆனாலும், அந்த நடைமுறையை தொடர்ந்து மூன்று வருடங்கள் பதக்கம் வெல்கின்ற வீரர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
இதன்படி. இவ்வருடம் நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா இரத்து செய்யப்பட்டாலும் அந்த வீரர்களுக்கான போனஸ் புள்ளி நடைமுறையில் மாற்றங்கள வராது என கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும், இவ்வருடத்தில் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மாத்திரம் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை நடத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியிருந்த போதிலும், இறுதியில் அந்த முயற்சியையும் கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தியகமவில்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சகல விளையாட்டுப் போட்டிகளும் தடைப்படுள்ள நிலையில்…
இந்த நிலையில், இந்த வருடத்துக்கான அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை இரத்து செய்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும விரைவில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க