ஆட்ட நிர்ணய சதியின் உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் – சங்கக்கார

1029
Kumar Sangakkara

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை விசாரணைகளின் முடிவில் தெரியவரும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவித்தார். 

விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிடம் இன்று (2) வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது.

உலகக்கிண்ண ஆட்ட நிர்யணம்: அரவிந்த, தரங்கவிடம் விசாரணை

2011 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம்

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே அவர் இவ்வாறு இன்று காலை அழைக்கப்பட்டிருந்தார். 

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (2) காலை 9 மணிக்கு  விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.

இதன்படி, சுமார் 9 மணித்தியாலங்கள் இடம்பெற்ற விசாரணையை முடித்துக்கொண்டு குமார் சங்கக்கார இன்று மாலை 6 மணியளவில் வெளியேறினார். 

இதனிடையே, வாக்குமூலம் அளித்த பிறகு வெளியே வந்த குமார் சங்கக்காரவிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

இந்த விசாரணைகள் முடிவுக்கு வரும் போது முன்னாள் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மையா? அல்லது பொய்யா? என தெரியவரும் என்று கூறினார்.

2011 காலப்பகுதியில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அரவிந்த டி சில்வாவிடம் கடந்த 30 ஆம் திகதி 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்கவிடம் நேற்று (1) சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்க இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தனவுக்கு நாளை (3) காலை 9.00 மணிக்கு விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமக பகிரங்கமாக குற்றச்சாட்டியிருந்த நிலையில், அது தொடர்பில் விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு கடந்த 24 ஆம் திகதி காலை அவரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டது.

ஆட்டநிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்தவினால் பொலிஸ் முறைப்பாடு

2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக

அத்துடன் முன்னாள் அமைச்சரினால் 24 காரணங்களை உள்ளடக்கியதாக 6 பக்கங்களைக் கொண்ட முறைப்பாடொன்றும் விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்தே, விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவால் தொடர்ந்து மூன்றாவது நாளாக வாக்குமூலங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க