கொரோனா வைரஸிலிருந்து தப்பித்த ஆர்ச்சர் பயிற்சிகளில்

186

குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால், இரண்டாவது தடவையாகவும் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார்.

ஆர்ச்சருக்கு இரண்டாவது கொரோனா பரிசோதனை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது

இங்கிலாந்துமேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை ) 8ஆம் திகதி  சவுத்தம்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28ஆம் திகதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.  

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ஆம் திகதி இங்கிலாந்தை வந்தடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்

மறுபுறத்தில், மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான பயிற்சிக்காக 30 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது

அவர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன்பின் ஒன்றிணைந்து பயிற்சியை மேற்கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்தது. அதன்படி இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று (26) பயிற்சிகளைத் தொடங்கினார்கள்

இதற்கிடையே அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு சுகயீனம் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும், பரிசோதனைகளின் முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது

இதுஇவ்வாறிருக்க, ஜொப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் பயிற்சி முகாமில் இணைந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே, முன்னெச்சரிக்கை காரணமாக ஜொப்ரா ஆர்ச்சருக்கு இரண்டாவது தடவையாகவும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அந்த நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது

இதன்படி, பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் நேற்று இங்கிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டார்.

MCC இன் முதல் பெண் தலைவராக கிளேர் கொன்னர்

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபை 702 கொரோனா தொற்றுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்துள்ளன. இதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதில் அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள், நடுவர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் சபை நிர்வாகிகள், ஊழியர்கள், போட்டி நடைபெறும் இடத்தின் ஊழியர்கள், ஹோட்டல் ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.   

கடந்த 3ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை 702  பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்தப் பரிசோதனையில் முடிவில் இங்கிலாந்து வீரர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<