இந்திய வேகப் பந்துவீச்சு குழாத்தில் உள்ள மகிமை

200

உலகின் மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சு குழாத்தை தற்போது இந்திய அணி  கொண்டுள்ளதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மொஹமட் ஷமி தெரிவித்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் ஆடுகளங்கள் சாதாரணமாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், அங்குள்ள வேகப் பந்துவீச்சாளர்கள் எதிரணிகளுக்கு கடுமையான சவாலை கொடுத்து வருகின்றனர். 

பயிற்சிக்கு திரும்பும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி

குறிப்பாக, இந்திய மண்ணில் மாத்திரமின்றி வெளிநாட்டு தொடர்களிலும், முக்கியமாக இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களிலும் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொடுத்து வருகின்றனர். 

குறிப்பாக, இந்திய டெஸ்ட் அணியை பொருத்தவரை, இஷான்த் ஷர்மா, ஜஸ்ப்ரிட் பும்ரா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் உள்ளனர். இவர்கள், கடந்த இரண்டு வருடங்களாக மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இவ்வாறான நிலையில், வெளிநாட்டு கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், உலகின் மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சு குழாம் தற்போது இந்திய அணியில் உள்ளதாக ஷமி குறிப்பிட்டுள்ளார். 

அதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர், “எந்தவொரு அணியும் ஒரே தடவையில் 5 வேகப் பந்தவீச்சாளர்களை கொண்டிருக்கவில்லை. இப்போதும் ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் எந்த அணியிலும் இல்லை. கிரிக்கெட் வரலாற்றில், இதுதான் முதற்தடவை என நினைக்கிறேன். எமது பந்துவீச்சாளர்கள் அனைவராலும் 145 இற்கும் அதிகமான வேகத்தில் பந்துவீச முடியும்” 

அத்துடன், இவ்வாறு 5 முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கின்ற நிலையில், அணித் தலைவர் விராட் கோஹ்லி, எவ்வாறு புதிய பந்தினை வீசுவதற்கு பந்துவீச்சாளரை தெரிவுசெய்வார் என்பதையும் ஷமி விளக்கியுள்ளார். 

“நாம் அனைவரும் ஒன்றாக இருந்து கோஹ்லியை பந்துவீச்சாளரை தெரிவுசெய்யுமாறு கூறுவோம். ஆனால், அவர் சாதாணமாக, இந்த விடயத்தில் என்னை ஈடுபடுத்த வேண்டாம். நீங்களாக இணைந்து ஒரு முடிவினை எடுக்குமாறு கூறுவார். இதுபோன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் அணியின் சந்திப்பில் இடம்பெறும்.  

அதனால், நான் முடிவுசெய்து ஏனைய இருவரையும் புதிய பந்தினை வீசுமாறு கூறுவேன். அதுமாத்திரமின்றி, பந்து சற்று பழையதானாலும், எனக்கு பந்துவீசுவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை” என்றார்.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<