கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதற்காக பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் T20 அணித் தலைவர் பாபர் அசாமிற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, தமது இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளனர்.
இந்த தொடருக்காக லாகூரில் பயிற்சிகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் இந்த பயிற்சிகளை கடந்த செவ்வாயன்று இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் வீரர்கள் அங்கேயே பயிற்சி மேற்கொள்ளவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டு வருகிறது.
சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறைவீரரான சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 எனப்படும்
இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைமையகத்திற்கு அருகில் உள்ள கடாபி மைதானத்தில் ஒருநாள் மற்றும் T20 அணித் தலைவர் பாபர் அசாம் மற்றும் சக வீரர்களான இமாம் உல் ஹக், வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா உள்ளிட்ட சில வீரர்கள் பயிற்சி மேற்கொண்டதாகவும் அதில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
அப்துல் காதிர் கிரிக்கெட் அகடமியில் இந்த பயிற்சிகளை மேற்கொண்ட பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்கள் அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் குறித்த வீரர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை மீறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் இனிவரும் காலங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க