இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் சமரி அத்தபத்துவுக்கு ஏ பிரிவு ஒப்பந்தம்

236

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்னணி வீராங்கனைகள் மற்றும் வளர்ந்துவரும் வீராங்கனைகள் இடம்பெறும் வகையில் 35 பேருக்கு ஆறு மாதகால புதிய ஒப்பந்தத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகின்ற இந்தப் புதிய ஒப்பந்தத்தில் 5 பிரிவின் கீழ் இந்த வீராங்கனைகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.  

இலங்கை – பங்களாதேஷ் தொடர் நடைபெறுவதில் சந்தேகம்!

இதன்படி, தேசிய மட்ட வீராங்கனைகள் 20 பேர் , பி, சி, டி என நான்கு பிரிவுகளின் கீழும், ஏனைய 15 பேரும் வளர்ந்துவரும் வீராங்கனைகள் பிரிவின் கீழும் உள்வாங்கப்பட்டுள்ளனர்

மேலும், வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்காக கடந்த வருடத்தில் வழங்கப்பட்ட நிலையான மாதாந்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக வரவுக்கான கொடுப்பனவை வழங்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் இலங்கை மகளிர் அணியின் அனுபவமிக்க வீராங்கனையும், டி20 அணித் தலைவியுமான சமரி அத்தபத்து மாத்திரம் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்

கடந்த வருடம் இப்பிரிவில் சசிகலா சிறிவர்தன மற்றும் இனோகா ரணவீர ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர். இதில் சசிகலா சிறிவர்தன சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றார்

இதேநேரம், அண்மைக்காலமாக போதியளவு திறமையை வெளிப்படுத்தத் தவறிய இலங்கை மகளிர் ஒருநாள் அணியின் முன்னாள் தலைவியான இனோகா ரணவீர பிரிவிலிருந்து பி பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளார்

இலங்கை மகளிர் கிரிக்கெட் ஒப்பந்த விபரம்

பிரிவுசமரி அத்தபத்து  

பி பிரிவுஇனோகா ரணவீர, அனுஷிகா சஞ்ஜீவனி, ஓசதி ரணசிங்க, நிலக்சி டி சில்வா, சுகந்திகா குமாரி, உதேஷிகா ப்ரபோதினி, ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா மாதவி

சி பிரிவுடிலானி மனோதரா, ப்ராசிதினி வீரக்கொடி, கவிஷா கல்ஹாரி

டி பிரிவுஅமா காஞ்சனா, இமல்க்கா மெண்டிஸ், இனோஷி பெர்னாண்டோ, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரத்ன, மதுஷிக்கா மெத்தானந்த, உமேஷா திமாசினி, சத்யா சந்தீபனி 

வளர்ந்துவரும் பிரிவுமல்ஷா ஷெஹானி, லிஹினி அப்சரா, தாரிக்கா செவ்வந்தி, ஜிமாஞ்சலி விஜேநாயக்க, ஹர்ஷனி விஜேரத்ன, சசிகலா சில்வா, சச்சினி நிசன்சலா, இரேஷா சந்தமாலி, தாருக்ககா ஷெஹானி, நிலக்சனா சந்தமினி, ரோஸ் பெரேரா, ஜனாதி அனாலி, ஷிக்காரி நிவர்த்தனா, திலிஷியா சத்சரனி, சந்துனி நிசன்சலா 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<