T20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ்

280
Dean Jones

நியூஸிலாந்து கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதால் அவுஸ்திரேலியாவுக்குப் பதிலாக T20 உலகக் கிண்ணத் தொடரை அங்கு நடத்தலாம் என அவுஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும்க்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை T20 உலகக் கிண்ணத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

>> ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவுக்கு வெளியில் நடக்கும் சாத்தியம்?

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த வருடத்துக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவிலும் .பி.எல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில T20 உலகக் கிண்ணத்தை திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து .சி.சி நிர்வாகக் குழு கடந்த மே 28ஆம் திகதி ஆலோசித்தது.  

அதில் T20 உலகக் கிண்ணத்தை எப்போது நடத்துவது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. T20 உலகக் கிண்ணத் தொடர் 2022இல் தான் நடத்தப்படும் என்ற செய்தி வெளியானது. இதற்கு .சி.சி தரப்பும் மறுப்பு தெரிவித்திருந்தது.

இதனிடையே, T20 உலகக் கிண்ணத்தை நடத்துவது குறித்து இறுதி தீர்மானம் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள .சி.சியின் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த நிலையில், T20 உலகக் கிண்ண தொடர் குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் ஸ்போர்ட் ஸ்கீரின் Youtube செனலுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் பேசுகையில்

“நியூஸிலாந்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. நியூஸிலாந்தில் அடுத்த வாரம் கொரோனா எச்சரிக்கை வழிமுறை ஒன்றுக்கு மாறலாம்

குறிப்பாக இதே நிலை அங்கு நீடிக்கும் பட்சத்தில் சமூக விலகல் நடவடிக்கை மற்றும் மக்கள் கூட்டம் சேர்வதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை அடுத்த வாரத்தில் விலக்கிக்கொள்ளப்படலாம் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்

எனவே, சமூக இடைவெளி, மக்கள் கூட்டத்துக்கான தடை போன்றவை விலக்கிக் கொள்ளப்படும். எனவே T20 உலகக் கிண்ணத்தை நியூஸிலாந்தில் நடத்தலாமே? இது ஒரு யோசனைதான்” என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<