காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளதால், தற்போதைய நிலையில், அங்கு (இலங்கையில்) ஐ.பி.எல் தொடரை நடத்துவது பொருத்தமானது என அவுஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மெத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.
4000 கோடி நஷ்டத்தை சந்திக்குமா BCCI??
இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாத சூழலில், கொழும்பு மற்றும் அதை அண்மித்த 4 சர்வதேச மைதானங்களில் பாதுகாப்பாக ஐ.பி.எல் தொடரை நடத்தலாம் என்று அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு நடக்க வேண்டிய ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால், செப்டம்பர் – ஒக்டோபர் மாதம் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ஆரம்பிக்க வேண்டும் என்றால், வீரர்களை ஒன்று திரட்டி பயிற்சி நடத்தி தொடரை ஆரம்பிப்பது பிசிசிஐக்கு முதல் சவாலாக இருக்கும்.
இந்நிலையில் இந்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக பிசிசிஐ காத்திருக்கிறது. இந்நிலையிலேயே, இந்தாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை நடத்த முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மெத்யூ ஹேடன் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹேடன் கூறுகையில், ”இந்தாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். ஐ.பி.எல் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடந்தாலும் சுவாரஸ்யம் குறையாது.
இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்கள் நிச்சயமாக ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றனர். ஆனால் இது போன்ற சூழலில் வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துக்கொள்ளக்கூடாது. மேலும் ரசிகர்கள் இல்லாத மைதானங்களிலும் போட்டிகளை நடத்தவேண்டும்.
அதேபோல அதிகம் அபாயம் இல்லாத இரண்டு அல்லது நான்கு மைதானங்கள் மட்டும் கொண்ட கொழும்பு போன்ற நகரில் முன் எச்சரிக்கைகளுடன் பாதுகாப்பாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை நடத்துவது நல்லது. அதற்கு ஏற்ப இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் ஐ.பி.எல் தொடரை நடத்த முன் வந்ததுள்ளது” என்றார்.
தலைவராகவும், பயிற்சியாளராகவும் சாதித்துக் காட்டிய மஹேல ஜயவர்தன
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கு இலங்கை மற்றும் ஐககிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆனால் ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை.
இருந்தாலும், இம்முறை ஐ.பி.எல் தொடரை நடத்த அரசு அனுமதி தேவைப்படுவதால், பிசிசிஐ அதற்காகக் காத்திருக்கிறது. மேலும் ரசிகர்களும் ஆர்வமுடன் ஐ.பி.எல் தொடரிக்காக காத்திருக்கின்றனர்.
அதேபோல் ஐபிஎல் தொடர் ரத்தானால் பிசிசிஐக்கு 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். அதனால் பெரும்பாலும் தொடரை நடத்துவதில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<