இலங்கையின் நட்சத்திர ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அனா மேரி ஒண்டாஜ்ஜி இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கத்துடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெளிக்கள கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கும், படப்பிடிப்பாளர்களுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு சீருடைகள் அண்மையில் அன்பளிப்புச் செய்தார்.
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரும்பாலான ஊடகவியலாளர்களும், படப்பிடிப்பாளர்களும் பாதுகாப்பு சீருடைகளின்றி செய்திச் சேகரிப்பு மற்றும் படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விளை.துறை ஊடகவியாலளர்கள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உதவிக்கரம் …………
எனவே, அவர்களது சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் கருதி பாதுகாப்பு சீருடைகளை வழங்கிவைக்க இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கருப்பையா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கத்துடன் இணைந்து தனது பங்களிப்பினை இலங்கையின் இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அனா மேரி, தனது மன்றமான ஏ குவின்ட் ஒண்டாஜ்ஜி (A Quint Ondaatje Foundation) ஊடாக வழங்கியிருந்தார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வெளிக்கள கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கும், படப்பிடிப்பாளர்களுக்கும் 30 தனிப்பட்ட பாதுகாப்பு சீருடைகள் விளையாட்டுத்துறை அமைச்சின் வளாகத்தில் வைத்து அன்பளிப்புச் செய்யப்பட்டது.
அத்துடன், சுவ செரிய அம்யூலன்ஸ் சேவைக்கும் தனிப்பட்ட சீருடைகள், 1000 முகக்கவசங்கள், 20 லீட்டர் செனிடைஸர் மற்றும் கையுறைகள் வழங்கி வைக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கொரோனாவுக்காக ஒருநாள் சம்பளத்தைக் கொடுக்கும் விளையாட்டுத்துறை ஊழியர்கள்
இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு ………
இதனிடையே, கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு சீருடை வழங்கியது குறித்து அனா மேரி கருத்து தெரிவிக்கையில்,
“நாம் அனைவரும் சமமானவர்கள். கொரோனா வைரஸை ஒழிப்பதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனவே, அவர்களுக்கு எமது மன்றத்தினால் முடிந்த உதவிகளை வழங்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்.
சர்வதேச ஜிம்னாஸ்டிக் அரங்கில் இலங்கை சார்பாக பங்குபற்றிய முதலாவது வீராங்கனையென்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ள 19 வயதான அனா மரி குவின்ட் ஒண்டாஜ்ஜி, இறுதியாக இந்தோனேஷியாவில் 2018இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனாவுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால், விசேட அதிரடிப் படையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<