T20I உலகக் கிண்ணத்துக்கான குழாத்துடன் தயார் நிலையில் ஆஸி

169

ஐசிசி T20I உலகக் கிண்ணத்திற்கு குறைந்த காலப்பகுதி மாத்திரமே உள்ள நிலையில், தங்களுடைய குழாம் கிட்டத்தட்ட தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் ட்ரெவர் ஹோன்ஸ் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.)…..

இதுவரையில், அணிக்குழாமில் முக்கிய இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு அல்லது மூன்று இடங்களுக்கான வீரர்களை தெரிவுசெய்ய வேண்டியுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை T20I போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றது. இறுதியாக நடைபெற்ற 10 போட்டிகளில் ஆஸி. அணி 9  வெற்றிகளை பெற்றுள்ளது. இதில், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T20I தொடரை கைப்பற்றியுள்ளது.

எனினும், இதன் பின்னர் கொவிட்-19 வைரஸ் காரணமாக போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அணியின் ஸ்திரத்தன்மை எவ்வாறு உள்ளது என்பது தொடர்பிலும், குழாமின் தயார்படுத்தல்கள் குறித்தும் ட்ரெவர் ஹோன்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

“அணிக்குழாத்தை தெரிவுசெய்யும் போது, கடைசி இரண்டு இடங்களை தெரிவுசெய்வதுதான் கடினமான விடயம்.  குறிப்பாக கடந்த 12 மாதங்களாக தெரிவுசெய்யப்பட்டு விளையாடிய T20I அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றமை அணியின் முன்னேற்றத்தை காட்டுகிறது. நாம், இப்போது குழாத்தை தெரிவுசெய்வதனை நெருங்கியுள்ளோம். இதனை சரிசெய்தால் குழாத்தை உடனடியாக அறிவிக்க முடியும்” என்றார்.

அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாம்கள் புதுமுக வீரர் மார்னஸ் லெபுச்செங்கின் வருகையால் பயனடைந்து வருகின்றன. ஆனால், T20I  போட்டிகளில் அவர் பிரகாசிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், உலகக் கிண்ண குழாத்தில் லெபுச்செங் இணைக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது. குறித்த இடத்துக்கான வாய்ப்பு திறக்கப்பட்டுள்ள போதும், லெபுச்செங்கிற்கு அதிகமான பணிச்சுமையை கொடுக்கக்கூடாது என்பதை ட்ரெவர் ஹோன்ஸ் வெளிக்காட்டியுள்ளார்.

“லெபுச்செங் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், அவருக்கு இன்னும் பணிச்சுமை கொடுக்கக்க முடியுமா? என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், குறுகிய காலப்பகுதியில் இரண்டு வகையான போட்டிகளில் பிரகாசிக்கும் ஒருவருக்கு, ஏன் T20I போட்டிகளில் விளையாட முடியாது கேள்வியும் எங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த தருணத்தில் எம்மிடம் மிகச்சிறந்த T20I அணியொன்று உள்ளது. மேற்குறிப்பிட்ட ஓரிரு இடங்கள் தயார்செய்யப்படவிருக்கிறது. எனினும், நாம் உலகக் கிண்ணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<