கொரோனாவை விட பயங்கரமானவர் சர்வான் – கெயில் ஆவேசம்

155

ஜமைக்கா தலவாஸ் அணியிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ராம்நரேஷ் சர்வான் தான் காரணம் என குற்றம் சுமத்தியுள்ள கிறிஸ் கெயில், சர்வானை கொரோனா வைரஸை விட பயங்கரமானவர் என்று தெரிவித்துள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெயில், கரிபியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார்

CPL இல் புதிய அணிக்காக விளையாடவுள்ள கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற கரீபியன் ப்ரீமியர்..

இந்த சீசனில் அவர் அந்த அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டெரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா சோக்ஸ் அணியில் கெயில் இணைந்து கொண்டார்

இந்த நிலையில் ஜமைக்கா அணியில் இருந்து தன்னை வெளியேற்றியதற்கு அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் ராம்நரேஷ் சர்வான் தான் காரணம் என்று கிறிஸ் கெயில் குற்றம் சாட்டியுள்ளார்

கிறிஸ் கெயிலுடன் இணைந்து சர்வான் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து வெளியிட்ட வீடியோ பதிவில் கெயில் கூறியிருப்பதாவது,

“இப்போதைக்கு சர்வான்…. நீ கொரோனா வைரஸை விட கொடியவராக இருக்கிறாய். ஜமைக்கா அணியில் இருந்து என்னை கழற்றி விட்டதில் உனது பங்கு மிகப்பெரியது என்பதை அறிவேன்

அணியின் உரிமையாளருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அணியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் முயற்சிக்கிறார்

அவருக்கும், அப்போதைய தலைவராக இருந்த அன்ட்ரூ ரஸல்ஸ் உள்ளட்ட மற்ற வீரர்களுக்கும் அணியில் நிறைய பிரச்சினை இருக்கிறது. ஆனால் நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று அவர் சொல்லி இருக்கிறார்.  

ஆனாலும் இன்னும் ஏன் எனது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. நீ ஒரு பாம்பு. பழிவாங்கி விட்டாய். கரீபியன் மக்களால் அதிக நேசிக்கப்படும் நபர் நீ கிடையாது. பயிற்சியாளர் பதவிக்கு பொருத்தமானவர் கிடையாது. உன்னிடம் முதிர்ச்சி இல்லை. என்னை நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டாய்.

நாம் இருவரும் அப்போது ஒரே அறையை பகிர்ந்து கொண்டோம். நீங்கள் பார்படோஸிலிருந்து என்னை வீட்டிற்கு அனுப்ப அணியின் நிர்வாகிகளை அனுமதித்தீர்கள். நான் அதை ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் மன்னிக்கிறேன், ஆனால், நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று கெயில் கூறினார்

“நீங்கள் சென்று நிர்வாக குழுவிடம் உங்களால் தூங்க முடியவில்லை என்று சொன்னீர்கள். ஏனெனில் கிறிஸ் கெயில் இரவு தாமதமாக தொலைக்காட்சி பார்க்கிறார். அதற்காகவே நான் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்.  

மூன்று மாதங்கள் சம்பளம் இல்லாமல் விளையாடிய மே. தீவுகள் வீரர்கள்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து..

எல்லோருடைய பார்வையிலும், நீங்கள் ஒரு துறவி, நீங்கள் நல்ல மனிதர் போலச் செயல்படுகிறீர்கள். சர்வான், நீங்கள் மோசமானவர். நீங்கள் ஒரு விஷம் கொண்ட பாம்பு” என்று கிறிஸ் கெயில் கூறினார்

நீங்கள் எல்லாம் என்னை குறைவாக மதிப்பிட்டு விட்டீர்கள். 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் களத்தில் நுழைந்து இன்னும் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரே வீரர் நான் தான். மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள்.  

அந்த சகாப்தத்தில் கடைசி வீரராக எஞ்சி நிற்கிறேன். இன்னும் களத்தில் வலுவான வீரராக உள்ளேன். தொடர்ந்து வெற்றியாளராக வலம் வருவேன் என்று கிறிஸ் கெயில் அந்தக் காணொளியில் கூறியுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக <<