IPL தொடருக்காக ஆசிய கிண்ண அட்டவணையை மாற்றமாட்டோம்: PCB

151

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை நடத்துவதற்காக  ஆசியக் கிண்ண போட்டி அட்டவணையை மாற்றுவதற்கு சம்மதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தெரிவித்துள்ளது.  

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக் தொடரான .பி.எல் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்றால் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் அருகில் இருப்பதாக தெரியவில்லை – கங்குலி

கொரோனா வைரஸ் காரணமாக……………..

எனினும், அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டால் ஒக்டோபர்நவம்பரில் .பி.எல் தொடர் நடத்தப்படலாம் என்ற கணிப்பு உள்ளது.

உலகக் கிண்ணத்துக்கு முன் ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான உரிமத்தை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு போட்டிக்கு தயாராகும் நிலை ஏற்பட்டால் .பி.எல் போட்டிக்காக ஆசியக் கிண்ண போட்டி அட்டவணையை எக்காரணம் கொண்டும் மாற்றியமைக்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி வசிம் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும். இதுதான் எங்களது நிலை. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.  

ஒருவேளை கொரோனா தொற்றால் ஆசிய கிண்ணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே அந்த திகதியில் நடத்தப்பட மாட்டாது

எனவே, .பி.எல் போட்டிக்காக நாங்கள் ஆசியக் கிண்ணம் நடைபெறும் திகதியை ஒத்திவைக்க சம்மதிக்கமாட்டோம்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நவம்பர்டிசம்பர் மாதத்திற்குச் செல்லலாம் என சிலர் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் எங்களை பொறுத்த வரைக்கும் அதற்கு வாய்ப்பே இல்லை

உறுப்பு நாடாக இருக்கின்ற காரணத்தால் ஆசிய கிண்ணத்தை உங்கள் எண்ணம்போல் மாற்றினால் அது சரியல்ல. அதற்கு எங்களுடைய ஆதரவு இருக்காது” என தெரிவித்தார்.

இதேநேரம், டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் இரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் விளையாடப்படலாம். ஏனெனில் டி20 உலகக் கிண்ணம் நடைபெறாவிட்டால் ஒவ்வொரு கிரிக்கெட் சபையும் 15 முதல் 20 மில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்

IPL கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்)……………..

எதுஎவ்வாறாயினும், டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் திட்டமிட்டபடி  அவுஸ்திரேலியாவில் நடைபெறும் என்று .சி.சி.க்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்ததாகக் குறிப்பிட்ட வசிம் கான், பயண மற்றும் சமூக இடைவெளி குறித்த கட்டுப்பாடுகள் தொடர்பில் தனது அரசாங்கத்திடம் இருந்து உத்தரவுகளை பெற்றுக்கொண்ட பின்னர் ஒவ்வொரு மாதமும் .சி.சிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில்,  

எதிர்வரும்க்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டியை இந்தியாவிலும், அடுத்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் டி20 உலகக் கிண்ணப் போட்டியை அவுஸ்திரேலியாவிலும் நடத்த வேண்டும்

சுற்றுலா பாகிஸ்தான் – நெதர்லாந்து தொடர் ஒத்திவைப்பு

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான……………

இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பாக அதாவது செப்டம்பர் மாதம் இந்தியாவில் .பி.எல். போட்டியை நடத்தவும் வாய்ப்பு உண்டு. இது உலகக் கிண்ணப் போட்டிக்கு வீரர்களுக்கு போதுமான பயிற்சியாக அமையும்

அத்துடன், இந்த சமயத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை டிசம்பர் மாதத்தில் நடத்திக் கொள்ளலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<