பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சகலதுறை வீராங்கனையுமான சனா மிர் தன்னுடைய 34ஆவது அகவையில் வைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கின்றார்.
கடந்த 2005ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்காக சர்வதேச அறிமுகம் பெற்ற சனா மிர் இதுவரை 120 ஒருநாள் போட்டிகளிலும், 106 T20 போட்டிகளிலும் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் இறுதிப் பந்தில் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள்
கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களை…
தனது சுழல் மூலம் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 151 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் சனா மிர், பாகிஸ்தான் மகளிர் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை பெற்றுள்ள வீராங்கனையாக காணப்படுவதோடு, உலகில் அதிக ஒருநாள் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீராங்கனைகளின் பட்டியலில் நான்காம் இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், T20 போட்டிகளில் 89 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் சனா மிர், பாகிஸ்தான் மகளிர் அணிக்காக T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய இரண்டாவது வீராங்கனையாக சாதனை செய்திருப்பதோடு, உலகில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ஓட்டங்கள் கடந்து 100 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய வீராங்கனைகளில் ஒருவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றோடு மகளிர் அணிகளுக்கான ஐ.சி.சி. இன் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்ற ஒரே பாகிஸ்தான் வீராங்கனையாகவும் சனா மிர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டின் ஒக்டோபரில் நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறு ஓய்வு எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்ட சனா மிர், இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் குழாத்திலும் இடம்பெறாமல் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது ஓய்வு பற்றி கருத்து வெளியிட்ட சனா மிர், தான் நீண்ட காலம் யோசனை ஒன்றை செய்த பின்னர் எடுத்த முடிவே இதற்கு காரணம் எனத் தெரிவித்தார்.
”கடந்த சில மாதங்கள் எனக்கு முடிவு ஒன்றினை எடுப்பதற்கான வாய்ப்பினை வழங்கியிருந்தது. எனவே, இதுவே (ஓய்வுக்கான) சரியான தருணம் என உணர்கின்றேன். நான் எனது திறமைக்கு ஏற்ப இந்த நாட்டுக்கும், (இந்த) விளையாட்டிற்கும் சிறந்த பங்களிப்பினை வழங்கியுள்ளதாக நம்புகின்றேன்.” என்றார்.
இந்திய வீரர்கள் அவர்களுக்காகவே கிரிக்கெட் ஆடினர் – இன்சமாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள்…
சனா மிர்ரின் ஓய்வு குறித்து கருத்து வெளியிட்ட அந்நாட்டு கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி வசீம் கான், சனா மிர் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டுக்கு நீண்ட கால உந்துதலாக இருந்த வீராங்கனை என்றும், அவரின் முன்னுதாரணத்தை கண்டு நிறைய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பாகிஸ்தானில் உருவாகி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<