கொரோனாவுக்காக துடுப்பு மட்டைகளை ஏலம் விடும் பங்களாதேஷ் வீரர்கள்

181

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக சகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகிய இரண்டு வீரர்களும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் வகையில் தத்தமது துடுப்பு மட்டைகளை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளனர்.  

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் முழு உலகமுமே ஸ்தம்பித்துள்ளது. ஏனைய நாடுகளைப் போல பங்களாதேஷில் உள்ள ஏழை மக்கள் உணவின்றி பரிதவித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது

ஐசிசியின் தொடர்களில் பங்கேற்க ஜாவிட் உமருக்கு தடை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாவிட் ……….

இதனால் பிரபலங்கள், வீரர்கள், தொழிலதிபர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகிறார்கள்.  

இதுஇவ்வாறிருக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சகிப் அல் ஹசன், தனது அறக்கட்டளை ஊடாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய கடந்த மார்ச் மாதம் முதல் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தார்

அதற்காக தனது சக கிரிக்கெட் வீரர்களுக்கும் அழைப்பு விடுத்த அவர் ஜெர்சி, துடுப்பு மட்டை, பந்து உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை ஏலம் விட்டு நிதி திரட்டும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்

அந்த வகையில், கொரோனா வைரஸுக்கு நிதி திரட்டுவதற்காக கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் தான் பயன்படுத்திய பயன்படுத்திய துடுப்பு மட்டையை ஏலம் விட சகிப் அல் ஹசன் முடிவு செய்துள்ளார்.  

இதுகுறித்து சகிப் கூறுகையில், ஏற்கனவே ஏலத்தின் மூலம் நிவாரண நிதி திரட்ட முடிவு செய்திருந்தேன். இதற்காக கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணம் முழுவதும் பயன்படுத்திய ஒரே துடுப்பு மட்டை உள்ளிட்ட உபகரணங்களை ஏலத்தில் விடவுள்ளேன்.  

இது எனக்கு மிகவும் பிடித்த இராசியான துடுப்பு மட்டை. உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற முன் இந்த துடுப்பு மட்டையினால் 1500 ஓட்டங்களைக் குவித்தேன். இருப்பினும், இரசிகர்கள் தான் எனக்கு முக்கியம்” என்று சகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரான சகிப் அல் ஹசன், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டார்.

இந்தத் தொடரில் இரண்டு சதம், ஐந்து அரைச்சதங்களுடன் 606 ஓட்டங்களை விளாசினார். அத்துடன் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்

உலகக் கிண்ணத் தொடரில் 600க்கு மேல் ஓட்டங்களைக் குவித்து, 10க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்

எனினும், கடந்த வருடம்க்டோபர் மாதம் சகிப் அல் ஹசனுக்கு சூதாட்ட புகாரில் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்தது.

2018இல் இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுடன் இடம்பெற்ற முக்கோணத் தொடரின் போது பெற்றுக் கொண்ட சூதாட்ட அணுகுமுறை தொடர்பில் இரண்டு முறை ஐசிசிக்கு தெரியப்படுத்தாமை, 2017இ18ஆம் ஆண்டுகளில் .பி.எல் போட்டிகளின் போது பெறப்பட்ட அணுகுமுறை தொடர்பிலும் தெரியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றங்களுக்காக சகிப் அல் ஹசனுக்கு இரண்டு வருட போட்டித்தடை விதிக்க .சி.சி நடவடிக்கை எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு முகங்கொடுக்கவுள்ள உமர் அக்மல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் அந்நாட்டு ….

இதுஇவ்வாறிருக்க, பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான முஷ்பிகுர் ரஹீமும் தனது துடுப்பு மட்டையை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொரோனா தடுப்பு நிதிக்கு வழங்குவேன் என்று தெரிவித்தார்.

இதன்படி, கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கன்னி இரட்டைச்சதம் அடித்த துடுப்பு மட்டையை அவர் ஏலத்தில் விடவுள்ளார்

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இலங்கைக்கு எதிராக கன்னி இரட்டைச்சதம் அடித்த எனது துடுப்பு மட்டையை ஏலம் விடவுள்ளேன்” என தெரிவித்தார்

முன்னதாக, கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளரான ஜோஸ் பட்லர், தான் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அணிந்த ஜெர்ஸியை ஏலத்தில் விட்டார்

அத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய அணியின் இளம் வீரரான லோகேஷ் ராகுல், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தான் பயன்படுத்திய துடுப்பு மட்டை உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  

இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை அறக்கட்டளை மூலமாக குழந்தைகளுக்கு கொடுக்க ராகுல் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<