புனரைக்கப்பட்டு வரும் ரியல் மெட்ரிட் கழகத்தின் Santiago Bernabeu அரங்கின் புனரமைப்புக்குப் பின்னரான பிரமாண்ட வீடியோ காட்சியை அந்தக் கழகம் வெளியிட்டுள்ளது.
360 பாகை வீடியோ திரையைக் கொண்டதாக முழுமையாக கூரையால் மூடப்படும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் பார்சிலோனா கழகம்
பார்சிலோனா கழகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அதன்
ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் அமைந்திருக்கும் 73 ஆண்டு பழமையான Santiago Bernabeu அரங்கில் பாரிய புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் கிடைத்தது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஸ்பெயின் முழுமையாக முடக்கப்பட்டிருந்தபோதும் இந்த அரங்கின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் லா லிகா தொடரின் பலம்மிக்க அணியான ரியல் மெட்ரிட் இந்தக் கட்டுமானப் பணிகள் பூர்த்தி அடைந்த பின் அரங்கின் புதிய தோற்றத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையிலேயே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி மைதானத்தை முழுமையாக மூடும் கூரை வசதி ஏற்படுத்தப்படுவதால் எந்த ஒரு காலநிலையிலும் எந்த தடங்கலும் இன்றி போட்டியை நடத்து வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் 360 பாகை கொண்டதாக விளையாட்டு அரங்கைச் சூழ நவீன தொழில்நுட்பத்துடனான டிஜிட்டல் திரையை கொண்டதாகவும் Santiago Bernabeu அரங்கு மாற்றப்படவுள்ளது. தவிரவும், அந்த அரங்கில் இருக்கும் ரியல் மெட்ரிட் கழகத்தின் அருங்காட்சியகமும் இதன்மூலம் புதுப்பிக்கப்படவிருப்பதோடு பொழுதுபோக்கு அம்சங்கள் பலதும் அங்கு வடிவமைக்கப்படவுள்ளன.
இதன்போது இந்த அரங்கின் பரப்பளவை 66,000 சதுர மீற்றர் அளவு விரிவுபடுத்தி புதிய ஹோட்டல், பிரமாண்ட உணவகம் மற்றும் கடைத் தொகுதிகளும் அமைக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும் இந்தப் புனரமைப்புப் பணிகளால் அரங்கின் இருக்கை எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படாது என்பதோடு மாறாக அந்த எண்ணிக்கை ஓர் இருக்கையால் குறையவுள்ளது. இதன்படி தற்போது Santiago Bernabeu அரங்கில் 80,243 பேருக்கு போட்டிகளை பார்வையிட முடியும். புனரமைப்புக்குப் பின்னர் இது 80,242 ஆக குறையவுள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்தப் பாரிய புனரைப்புப் பணிகளுக்காக 500 மில்லியன் யூரோ செலவிடப்படுகிறது. இதனால் எதிர்வரும் வீரர்கள் பரிமாற்ற நடவடிக்கையில் ரியல் மெட்ரிட் புதிய வீரர்களை வாங்குவதில் கட்டுப்பாடுகளை கொண்டுவர வாய்ப்பு உள்ளது. இதனால் புதிய வீரர்களை வாங்க வேண்டுமாயின் தற்போது அணியில் இருக்கும் வீரர்களை விற்க வேண்டிய நெருக்கடிக்கு பயிற்சியாளர் சினடின் சிடேன் முகம்கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமாக ஐரோப்பா எங்கும் கால்பந்து போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சூழலில் தற்போது மைதானம் போட்டிகளுக்காக பயன்படுத்தப்படாத நிலையில் அதனை வைரஸ் தொற்றுக்கு எதிரான மருத்துவ பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Santiago Bernabeu அரங்கு கால்பந்தின் பல முக்கிய தருணங்களுடன் தொடர்புபட்ட மைதானமாகும். இங்கு பல எல் கிளாசிக்கோ மற்றும் ரியல் மெட்ரிட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. 2010 ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பெயார்ன் முனிச் அணியை தோற்கடித்து இன்டர் மிலான் அதிர்ச்சி கொடுத்தது இந்த அரங்கிலாகும். 1982 இல் இத்தாலி பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றியதும் இங்குதான். சினடின் சிடேன், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ராவுல் போன்ற முன்னணி வீரர்கள் ஆடிய சொந்த மைதானமாகவும் இது இருந்துள்ளது.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க