உலகின் அதிவேக மனிதரான உசேன் போல்ட், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய காரணியாக உள்ள ‘சமூக விலகலை’ எடுத்துக் காட்டுகின்ற தனது புகைப்படமொன்றை டுவிட்டரில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடு அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021 வரை ஒரு ….
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வருவதால், உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருங்கிவிட்டது. அதனால் இப்போது முக்கிய தேவையாக இருப்பது சமூக விலகல் தான்.
இந்த நிலையில், சமூக விலகல் குறித்து முன்னாள் தடகள வீரர் மின்னல் மனிதன் உசைன் போல்ட் வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் சக போட்டியாளர்களை முந்தி, எல்லைக் கோட்டைக் கடக்கும் படம் இருந்தது.
Social Distancing #HappyEaster pic.twitter.com/lDCAsxkOAw
— Usain St. Leo Bolt (@usainbolt) April 13, 2020
இதை சமூக விலகல் என தலைப்பு கொடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் போல்ட். இவர் இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட சிறிது நேரத்தில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 90,000 பேர் மீள்பதிவு செய்தனர்.
முன்னதாக தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், உலகம் எங்கும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து ஜமைக்கா மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஜமைக்கா மக்களுக்கு நிதிதிரட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “Jamaica Together We Stand” கலை நிகழ்ச்சிக்கு அந்நாட்டு பணப் பெறுமதியில் 5 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளார்.
33 வயதான உசைன் போல்ட், மெய்வல்லுனர் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். இவர் 100 மீற்றர் ஓட்டத்தில் கடந்த 2009இல் (9.58 செக்.) உலக சாதனை படைத்தவர். மேலும் 200 மீற்றர் ஓட்டத்திலும் உலக சாதனை படைத்தார்.
போல்ட் கடந்த 2017 இல் சர்வதேச மெய்வல்லுனர் அரங்கில் இருந்து போல்ட் ஓய்வு பெற்றார். போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதில் 2008 பீஜிங் ஒலிம்பிக், 2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ரியோ ஒலிம்பிக் என 100 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் ஹெட்ரிக் தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை ஜமைக்காவில் 70 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<