ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடு அறிவிப்பு

188
AFP

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021 வரை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் வீரர்கள் தகுதி பெறுவதற்கான புதிய திகதியை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனமும் அறிவித்துள்ளது. 

ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 9ஆம் திகதி வரை ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற இருந்தது.  

ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதத்தில் என அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 ….

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால், ஒலிம்பிக் விளையாட்டு விழா அடுத்த வருடம் ஜூலை 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.  

இந்த வருடம் ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறும் வகையில் அதற்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப புதிய காலக்கெடுவை சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

அதன்படி அடுத்த வருடம் ஜூன் 29ஆம் திகதி வரை தகுச்சுற்றுகளை நடத்தி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பெயர் பட்டியலை அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு, இந்த காலக்கட்டத்திற்குப் பிறகு தகுதி பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, இவ்வருடம் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா பிற்போடுவதற்கு முன்னர் 11 ஆயிரம் வீர, வீராங்கனைகளில் 57 சதவீதமானோர் தகுதிபெற்றிருந்தனர்

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2022க்கு ஒத்திவைப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வருடம் நடைபெறவிருந்த உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை 2022ஆம் ஆண்டு வரை ……….

இதன்படி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அந்த வீரர்களுக்கு அனுமதி வழங்குவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தரவாதம் அளித்திருந்தது.  

இந்த நிலையில், குதிரையோட்டம், ஹொக்கி, கரப்பந்தாட்டம், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, ஒலிம்பிக் போட்டிகள் பிற்போடப்பட்டமையைத் தொடர்ந்து மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தகுதிபெறும் திகதியை மாற்றியமைக்க சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அடுத்த வருடம் ஜுன் மாதம் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற முடியும் என அதன் தலைவர் செபெஸ்டியன் கோ அறிவித்துள்ளார்.  

இதில் குறிப்பாக கடந்த வருடம் மே 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதியைப் பெற்றுக் கொண்ட வீரர்களுக்கு அடுத்த வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நேரடியாகப் பங்குபற்ற முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் காரணமாக ஓராண்டுக்கு பிற்போடப்பட்ட உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறும் என சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.  

கொரோனாவுக்காக ஒருநாள் சம்பளத்தைக் கொடுக்கும் விளையாட்டுத்துறை ஊழியர்கள்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைரஸுக்கு எதிரான நிதியத்துக்கு உதவும் வகையில், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகிய இரண்டு அரச நிறுவனங்களிலும் பணிபுரிகின்ற சுமார் …….

முன்னதாக உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் 2021 ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்தது.  

ஆனால் ஒலிம்பிக் விளையாட்டு விழா குறித்த காலப்பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை 2022ஆம் ஆண்டு வரை பிற்போடுவதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 >> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<