கொரோனாவினால் தற்கொலை செய்த பிரான்ஸ் கால்பந்து கழக மருத்துவர்

252
Bernard Gonzalez
Bernard Gonzalez

பிரான்ஸின் ஸ்டெடி டி ரீம்ஸ் கால்பந்து கழகத்தின் மருத்துவ ஆலோசகராக செயல்பட்டுவந்த பெர்னார்ட் கொன்சாலிஸ் என்ற வைத்தியர் தனக்கு கொரோனா வைரஸ் பரவியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 வயதுடைய பெர்னார்ட் கொன்சாலிஸ் என்ற வைத்தியர் பிரான்ஸ் நாட்டின் ரீம்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த லீக் வன் கழகங்களில் ஒன்றான ஸ்டெடி டி ரீம்ஸ் எனப்படும் கால்பந்து கழக அணியின் மருத்துவ ஆலோசகராக கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வந்தார்

மனைவியுடன் வசித்து வந்த வைத்தியருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.  

கொரோனா வைரஸினால் ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் கழக கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான, பிரான்சிஸ்கோ கார்சியா (21)…

இந்நிலையில், அந்த வைத்தியர் கவலை தாங்க முடியாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார்

இந்த சம்பவம் ஸ்டெடி டி ரீம்ஸ் கால்பந்து கழகத்துக்கு மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டு கால்பந்து இரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எமது கழகம் மட்டுமல்ல, ரீம்ஸில் உள்ள நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இவரது மரணச் செய்தியைக் கேட்டு அழுகிறார்கள் என்று .எப்.பி செய்திச் சேவையுடன் பேசிய ரீம்ஸின் மேயர் அர்நாட் ரொபினெட் கூறினார்.  

வைத்தியர் கொன்சாலிஸனால் ஒரு செய்தி அனுப்பியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதில் அவர் கொவிட்-19 க்கு பரிசோதனை செய்ததாகக் குறிப்பிட்டிருந்ததுடன், அதில் தனக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

ஆனால், அவர் நல்ல நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு கூறினர்

எனினும், அவருடைய மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஏனென்றால், அவரை எனக்கு பல வருடங்களாகத் தெரியும்.  

கால்பந்து உலகை வெல்ல உயிருக்காக போராடும் நெதர்லாந்து நட்சத்திரம்

வளர்ந்து வரும் இளம் கால்பந்து வீரர் தொடக்கம் உயிருக்காக போராடும் கோமா நிலைக்குச்…

அவர் இந்த கழகத்தின் வைத்தியராக மட்டுமல்ல. ரீம்ஸில் பலருக்கு பொதுப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அவர் தன்னுடைய மனித மற்றும் தொழில்முறை குணங்களுக்கு அறியபட்டவர்

உண்மையில் அவரது மரணமானது எமது கால்பந்து குடும்பத்திலும், ரீம்ஸ் அணியிலும் மிகப் பெரிய இழப்பாகும் என ரீம்ஸின் மேயர் தெரிவித்துள்ளார்

இதுஇவ்வாறிருக்க, ஐரோப்பிய நாடான பிரான்ஸிலும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. அந்நாடில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்

இதற்கிடையே, அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவிய வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<