ஆஸி. வீரர் ஸ்டீவ் ஓ கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

162

அவுஸ்திரேலியாவின் இடதுகை சுழல்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   

35 வயதான இவர் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடரில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடி வந்ததுடன், 2019/20 பருவகாலத்தில் 5 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய சுழல்பந்து வீச்சாளராகவும் இடம்பிடித்தார்

ஐ.பி.எல் விளையாட கோஹ்லியை ஸ்லெட்ஜிங் செய்ய அஞ்சும் ஆஸி வீரர்கள்

ஐ.பி.எல் ஒப்பந்தங்களை பாதுகாத்து அந்தத் தொடரில் விளையாடுவதற்காக…….

எனினும், அவரை அடுத்த பருவகாலத்துக்கான ஒப்பந்தத்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் கழகம் நீக்கியதை அடுத்து முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்த முடிவு குறித்து ஸ்டீவ் கீபே கூறுகையில் நான் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்று கூறும்போது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் அந்த முடிவுக்கு நான் மரியாதை கொடுத்து ஏற்றுக்கொள்கிறேன்.

இதன்காரணமாக முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். நான் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய காலத்தைப் பற்றி நினைக்கும்போது, நான் பலவற்றை தவறவிட இருக்கிறேன்” என்றார்

அவுஸ்திரேலியாவின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய ஸ்டீவ் கீபே, கடந்த 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி இந்தியா வந்து விளையாடிய போது புனேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 70 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருந்ததுடன், இந்தியாவை வீழ்த்த முக்கிய காரணமாகவும் இருந்தார்.

அவுஸ்திரேலிய அணிக்காக 2014 முதல் 2017 வரையாக காலப்பகுதியில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 35 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்ததுடன், 7 டி20 போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவுக்காக விளையாடியிருந்தார்

அத்துடன், சுமார் 15 வருடங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய அவர், இதுவரை 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<