இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் இருக்கும் வீர, வீராங்கனைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குமான தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியினை கொரோனா வைரஸிற்கான எதிரான போராட்டத்திற்கு கொடுப்பதற்கு முன்வந்திருக்கின்றனர்.
ஏழை குடும்பங்களுக்கு இலங்கை முன்னாள் வீரர் பர்வீஸ் மஹ்ரூப் உதவி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், இலங்கை 19
அந்தவகையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களது மூன்று மாத சம்பளத்தின் 20% இற்கு சமமான பணத்தினை அதாவது 500,000 ஸ்ரேலிங் பவுண்களை (இலங்கை நாணயப்படி 116 மில்லியன் ரூபா) கொரோனா தொடர்பான நிவாரணப் பணிகளுக்காக கொடுக்க, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களுக்கான தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியினை கிரிக்கெட் பயிற்சியாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோரின் கொடுப்பனவுகளுக்காக தரவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீர, வீராங்கனைகள் இவ்வாறு தங்களது சம்பளத்தில் இருந்து கொரோனா வைரஸிற்கு எதிராக குறிப்பிட்ட தொகைப் பணத்தினை வழங்குவது அவர்களது சொந்த விருப்பத்தின் பெயரில் என்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீர, வீராங்கனைகளின் இந்த முயற்சி அனைவரிடத்திலும் மிகப் பெரும் வரவேற்பினைப் பெற்றிருக்கின்றது.
இதேநேரம், தங்களது சம்பளத்தில் இருந்து ஏனையோருக்கு உதவும் விடயம் பற்றி கருத்து வெளியிட்ட இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி ஹீத்தர் நைட், தற்போது கிரிக்கெட் விளையாட்டினையும் இந்த வைரஸ் பெரிதாக பாதித்திருக்கும் நிலையில், தங்கள் உதவி அனைவருக்கும் தேவையாக இருப்பதன் அவசியத்தை உணர்ந்து செயற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை மக்களுக்கான சேவையில் இணைந்த குசல் மெண்டிஸ்
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் குழாம்
முன்னர், இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) தங்களது ஊழியர்களின் கொடுப்பனவிற்காக அரசாங்கத்தின் உதவியினைப் பெறுவதாக குறிப்பிட்டிருந்ததோடு, தங்களது முகாமைத்துவ குழுவில் இருக்கும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் சம்பளத்தில் சிறு தொகையினை வைரஸிற்கு எதிரான போராட்டத்திற்கு வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தது.
கொரோனா வைரஸினால் இங்கிலாந்துடன் சேர்த்து முழு ஐக்கிய இராச்சியத்திலும் (UK) இதுவரை 38,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 3,600 இற்கு மேலான இறப்புக்களும் பதிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க