தென்னாபிரிக்காவை பிறப்பிடமாக கொண்ட டெவோன் கொன்வே, எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் திகதிக்கு பின்னர், நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடுவதற்கு ஐசிசி அனுமதித்துள்ளது.
நியூசிலாந்தில் தற்போது அதிகமாக பேசப்படும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான 28 வயதான டெவோன் கொன்வே, எதிர்வரும் பங்களாதேஷ் தொடரில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கிண்ண வெற்றிக்கு ரங்கன ஹேரத் திருப்புனை ஏற்படுத்திய நாள்
மார்ச் 31, 2014ஆம் திகதி என்பது இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள்
இதுதொடர்பில் குறிப்பிட்ட டெவோன் கொன்வே, “நான் இப்போது இரண்டு விதமாக உணர்கிறேன். குறிப்பாக நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடுவது மிக மகிழ்ச்சியான விடயம். ஆனால், உலகத்தில் இப்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைமை (கொரோனா தாக்கம்) மனதுக்கு வேதனை அளிக்கிறது” என்றார்.
டெவோன் கொன்வே கடந்த மூன்று ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்து வருகிறார். இதற்கு முன்னர், க்ரேண்ட் எலியோட், நெயில் வெங்கர், க்ரூகர் வென் வைக் ஆகியோர் தென்னாபிரிக்காவில் முதற்தர போட்டிகளில் விளையாடியதுடன், பின்னர், நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடினர். இவர்களுக்கு அடுத்தப்படியாக டெவோன் கொன்வே தென்னாபிரிக்காவில் முதற்தர போட்டிகளில் விளையாடி, நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடவுள்ளார்.
ஐசிசியின் புதிய விதிமுறையின் படி, வீரர் ஒருவர் ஒரு நாட்டில் தொடர்ச்சியாக 10 மாதங்கள் (ஒருவருடம்) தங்கியிருந்தால், அந்த நாட்டுக்காக விளையாட முடியும்.
டெவோன் கொன்வே நியூசிலாந்தின் உள்ளூர் தொடரில் வெலிங்டன் பையர்பேட்ஸ் அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார். அத்துடன், 2018-19 ஆண்டு பருவகாலத்தில் தொடரின் சிறந்த வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டார். அதேநேரம், இந்த பருவகாலத்தில் மொத்தமாக 1797 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், தனிநபர் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக ஆட்டமிழக்காமல் ஒரு இன்னிங்ஸில் 327 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
“எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் திகதியிலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இதற்காக நான் அதிகமான பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். நியூசிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்களுடைய இடத்தை பிடிப்பது என்பது இலகுவான விடயம் அல்ல” என டெவோன் கொன்வே மேலும் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மக்களுக்காக உதவிக் கரம் நீட்டும் சங்கா, மஹேல
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார
இதேவேளை, டெவோன் கொன்வே நியூசிலாந்தில் நடைபெற்ற சுப்பர் ஸ்மேஷ் T20 தொடரில் 68 என்ற ஓட்ட சராசரியிலும், 145 என்ற ஓட்ட வேகத்திலும் கூடியவாறு 543 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன் காரணமாக இந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து குழாத்தில் இவர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
முன்வரிசை துடுப்பாட்ட வீரராக இவரால் செயற்பட முடியும் என்பதுடன், கொலின் மன்ரோ மற்றும் மார்டின் கப்டில் ஆகியோருக்கு சரியான மாற்று வீரராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முதற்தர போட்டிகளில் விக்கெட் காப்பாளராக இவர் செயற்பட்டுள்ளதால், மேலதிக விக்கெட் காப்பாளராகவும் நியூசிலாந்து அணியில் இவர் விளையாட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க