ஊதியக் குறைப்புக்கு பார்சிலோனா வீரர்கள் இணக்கம்

216
Barcelona FC

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பார்சிலோன கழக வீரர்கள் தமது ஊதியத்தில் 70 வீத குறைப்புக்கு விருப்பத்தை வெளியிட்டதாக லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்  

ஸ்பெயினில் அவசர நிலை நீடித்து வரும் சூழலில் கழகத்தின் விளையாட்டுடன் சாராத ஊழியர்கள் முழு ஊதியத்தை பெறுவதற்கும் வீரர்கள் மேலதிக பங்களிப்பைச் செய்வார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். வைரஸ் தொற்று தீவிரம் அடைந்திக்கும் ஸ்பெயினில் கடந்த மார்ச் 12 தொடக்கம் அவசர நிலை நீடித்து வருகிறது

கொரோனாவுக்கு பிந்திய ஐரோப்பிய கால்பந்து

உலகெங்கும் கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டுகளும் தடைப்பட்டுள்ளன. மைதானங்களில்

உலகில் அதிக வருவாய் ஈட்டும் கால்பந்து வீரராக போபஸ் சஞ்சிகை பட்டியலிட்டிருக்கும் 32 வயதான மெஸ்ஸி ஆண்டுக்கு 127 மில்லியன் டொலர்களை ஈட்டுகிறார். இதில் அவரது சம்பளம் மற்றும் ஒப்பந்தங்கள் அடங்கும். அவர் பார்சிலோனாவில் இருந்து வாரத்திற்கு 600,000 யூரோவுக்கும் அதிகமான ஊதியம் பெறுகிறார். இந்தக் குறைப்பு மூலம் அவருக்கு ஊதியம் மாத்திரமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   

ஆர்ஜன்டீன முன்கள வீரரான மெஸ்ஸி முதல் நிலை அணியினரின் பெயர்களுடன் சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்சிலோனா குழாத்தின் ஏனைய வீரர்களும் அந்த அறிக்கையை பகிர்ந்துள்ளனர்

கொரோனா வைரஸ் காரணமாக கழகம் நிதி நெருக்கடியை கையாளப் போராடி வரும் நிலையில் வீரர்கள் தமது ஊதியத்தை தற்காலிகமாகக் குறைத்துக் கொள்ளும் உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டதாக பார்சிலோனா கழகமும் உறுதி செய்துள்ளது

இந்த ஊதியக் குறைப்பு ஆண்கள் முதல் நிலை அணிக்கு மாத்திரமன்றி கூடைப்பந்து அணி உட்பட கழகத்தின் ஏனைய தொழில்முறை அணிகளுக்கும் பொருந்துவதாக உள்ளது.

எமது சம்பளங்களைக் குறைத்துக் கொள்வதற்காக எப்போதும் எமது விருப்பத்தை வெளியிட்டோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம். ஏனென்றால், இந்த அசாதாரண சூழலை நாம் புரிந்திருப்பதோடு கழகம் எம்மிடம் கோரியதற்கு எப்போதும் நாம் உதவியாக இருப்போம் என்று மெஸ்ஸி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

மரணத்தை வென்று சிகரம் தொட்ட வான் டைக்

வெர்ஜில் வான் டைக் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியவர்

பல நேரங்களில் அவசியம் செய்ய வேண்டும் என்று நாம் உணரும்போது எமது சொந்த விருப்பில் நாம் பல விடயங்களை செய்துள்ளோம்

அதன் காரணமாக, காழகத்திற்குள் எம்மை பெரிதுபடுத்திக்காட்ட முயற்சிப்பவர்கள் அல்லது தெளிவாக நாம் செய்ய விரும்புகின்ற ஒன்று பற்றி எமக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது தொடர்பில் நாம் அதிர்ச்சி அடையப் போவதில்லை. உண்மையில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டால், இந்த கடினமான நேரத்தில் கழகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் உதவும் முறை ஒன்றை அடையலாம் என்றே நாம் எதிர்பார்த்தோம்

அந்த தருணம் வந்ததால் அவசர நிலைக் காலத்தில் எமது தரப்பில் 70 வீத ஊதிய வெட்டுப் பற்றி நாம் அறிவிக்கிறோம். இந்த நிலைமை நீடிக்கும் வரை கழகத்தின் அனைத்து ஊழியர்களும் தமது 100 வீத சம்பளத்தை பெறுவதற்கு நாம் பங்களிப்புச் செய்வோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பார்சிலோனா கழகத்தின் நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் வீரர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கடந்த வாரம் ஆரம்பமானது. இதில் கழகத்தினால் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை வீரர்கள் நிராகரித்ததாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியானது.    

இந்த இழுபறிக்கு மத்தியில், ஸ்பெயின் தொழிலாளர் சட்டத்திற்கு அமைய கழகத்தின் அனைத்து ஊழியர்களினதும் சம்பளத்தை தன்னிச்சையாகக் குறைக்கப்போவதாக பார்சிலோனா அறிவித்தது.  

எனினும் 500 மில்லியன் யூரோவுக்கு அதிகம் ஈட்டுகின்ற பார்சிலோனா முதல் நிலை அணியினரின் பங்களிப்பு மூலம் அந்தக் கழகத்தின் விளையாட்டு சாரா ஊழியர்களுக்கு தற்போது அவர்களின் முழு சம்பளத்தையும் வழங்க முடியுமாகியுள்ளது.    

சொந்த உறுப்பினர்களின் உரிமையுடையதும் வெளி முதலீடு இல்லாத சூழலிலும் பார்சிலோனா கழகம் இந்த நெருக்கடியால் பெரும் நிதி நிலை பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது.   

பார்சிலோனா ஏற்கனவே போட்டி வருவாய், அதேபோன்று கழகத்தின் அருங்காட்சியகம் மூலம் கிடைக்கின்ற வருவாயை இழந்துள்ளது. அதேபோன்று ஐரோப்பாவெங்கும் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தப் பருவத்தில் அந்த அணிக்கு பரிசுத் தொகை மற்றும் தொலைக்காட்சி மூலம் கிடைக்கும் வருவாயும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது.  

கொரோனா வைரஸுக்கு எதிராக ரொனால்டோ, மெஸ்ஸி பெரும் நிதியுதவி

கால்பந்து உலகின் பெரும் நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ

கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் ஏனைய கழகங்கள் வீரர்களின் ஊதியக் குறைப்புப் பற்றி ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதில் முதல் அணியாக பொருசியா டோர்ட்முன்ட் வீரர்களின் ஊதிய வெட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அடுத்த நான்கு மாதங்களுக்கு தமது சம்பளங்களை விட்டுக்கொடுப்பதாக ஜுவான்டஸ் வீரர்கள் கடந்த வார இறுதியில் அறிவித்தனர்.     

ஸ்பெயினின் அட்லெடிகோ மெட்ரிட், எஸ்பான்யோல் மற்றும் அலவெஸ் அணிகள் தொழிலாளர் சட்டத்திற்கு அமைய சம்பளக் குறைப்புப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன

கொவிட்-19 உலகளாவிய வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உள்ளது. அந்நாட்டில் 85 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு 7,300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க