பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளை நவம்பரில் நடத்த திட்டம்

143

கொரோனா வைரஸ் தொற்று பீதியால் இரத்து செய்யப்பட்ட பாகிஸ்தான் சுப் பர் லீக்கின் (PSL) அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும். இதன் ஐந்தாவது பருவகாலப் போட்டிகள் கடந்த மாதம் பாகிஸ்தானில் தொடங்கியது.  

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுதிப் போட்டிகள் திடீர் ரத்து: PCB அதிரடி

கொவிட்-19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று (17) நடைபெறவிருந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் (PSL) அரையிறுதி போட்டிகள் மற்றும் நாளை (18) நடைபெறவிருந்த இறுதிப் போட்டி என்பவற்றை ரத்து செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) நடவடிக்கை எடுத்துள்ளது.

மார்ச் மாதத்தின் 2ஆவது மாதத்தில் தொடர் முடிவடைய வேண்டும். எனினும், கொரோனா வைரஸ் தொற்று பீதியில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், லீக் போட்டிகளில் எண்ணிக்கையை குறைத்து பிளேஓப் சுற்று போட்டிகளை அரையிறுதியாக மாற்றியது. இரண்டு அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டியை ரசிகர்கள் யாருமின்றி மூடிய மைதானத்திற்குள் நடத்துவதற்கு ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்தது

ஆனால், வீரர் ஒருவர் கொரோனா அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. இதனால் எஞ்சிய போட்டிகள் கடந்த 17ஆம் திகதி இரத்து செய்யப்பட்டது

இந்நிலையில் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உலகம் உடனடியாக மீண்டு வந்தால் எஞ்சிய போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி வசிம் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வசிம் கான் கூறுகையில்லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வழங்க வேண்டும் அல்லது அடுத்த வருடம் நடைபெறவுள்ள தொடருக்கு முன் எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த வேண்டும் என்பது குறித்து நாங்கள் அணிகளின் உரிமையாளர்களிடம் நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும்

கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு நிலைமை சரியானால் மீதமுள்ள போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றலிருந்து தப்பிய பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (PSL) பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் …………

அத்துடன், ஏற்கனவே அறிவித்ததன் படி, எதிர்வரும்க்டோபர் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால் இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

முதலாவது அரையிறுதியில் முல்தான் சுல்தான் அணியும், பெஷாவர் ஷல்மி அணியும், மற்றைய அரையிறுதியில் கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் கிளெண்டர் அணியும் மோதவிருந்தன. இந்தப் போட்டிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<