பாலோ டிபாலாவுக்கு கொரோனா தொற்று

233

இத்தாலியின் முன்னணி கால்பந்து கழகமான ஜுவான்டஸின் நாட்சத்திர வீரர் பாலோ டிபாலாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அந்த கழகத்தின் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் என 121 பேர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது டிபாலா இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.  

ஆர்சனல் பயிற்சியாளருக்கு வைரஸ் தொற்று: ப்ரீமியர் லீக்கில் சலசலப்பு

ஆர்சனல் கால்பந்து கழக அணியின் தலைமை பயிற்சியாளர் மைக்கல் ஆர்டெட்டாவுக்கு…

ஜுவன்டஸ் கழகத்தின் பின்கள வீரர் டனிலே ருகானிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த வாரம் உறுதியானது. இறுதியாக நடைபெற்ற இன்டர் மிலான் அணிக்கு எதிரான போட்டியில் ஜுவான்டஸ் அணியில் இடம்பிடித்த அவர் சக வீரர்களுடன் உடைமாற்றும் அறையை பகிர்ந்துகொண்டார். ஜுவான்டஸ் வெற்றியீட்டிய அந்தப் போட்டி ரசிகர்கள் அனுமதிக்கப்படாது மூடிய அரங்கில் நடைபெற்றது.

ருகானிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து ஜுவான்டஸ் தமது அணியில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

டனிலே ருகானிக்கு கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானதை அடுத்து வீரர்கள், ஊழியர்கள், முகாமையாளர்கள், காவலர்கள் மற்றும் ஜுவான்டஸ் பணியாளர்கள் உட்பட 121 பேர் சுகாதார ஏற்பாட்டின் அடிப்படையில் கண்காணிப்புக் காலத்தில் வீடுகளில் சுயமாக தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்என்று ஜுவான்டஸ் கழகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் டிபாலாவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அந்தக் கழகம் குறித்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. எனினும், டிபாலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் சில தகவல்கள் கடந்த வாரமே வெளியாகி இருந்தன. எனினும் அவை பொய் என பின்னர் அறிவிக்கப்பட்டது.   

எவ்வாறிருப்பினும் தனக்கு மேற்கொண்டு பரிசோதனையில் கொரோனா தொற்று தனக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று டிபாலா தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தாய்க்கு அண்மையில் ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து அவரை பார்ப்பதற்கு போர்த்துக்கலில் மெடெய்ரா பிராந்தியத்தில் இருக்கும் தமது வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் இத்தாலி திரும்பாது அங்கேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டார். .

குறிப்பாக இன்டர் மிலானுக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ மற்றும் ருகானி நெருக்கமாக இருந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் புகைப்படம் ஒன்றை அந்த அணியின் சக வீரர் மிரலம் பஜ்னிக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியிருக்கும் இத்தாலியில் உயிரிழப்பு 4000 தாண்டியுள்ளது.

வைரஸை கட்டுப்படுத்த முழு நாடும் முடக்கப்பட்டிருப்பதோடு ஏப்ரஸ் 3 ஆம் திகதி வரை அனைத்து விளையாட்டுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த லியோன் அணிக்கு எதிரான ஜுவான்டஸ் அணியின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கின் 16 அணிகள் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.    

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<