ஐ.பி.எல். (IPL) டி20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது அத்தியாயம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் விளையாடும் அணியான சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் தமது தலைவராக சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னரை மீண்டும் நியமனம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது.
2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு
எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 13ஆவது இந்தியன் ப்ரீமியர் …….
டேவிட் வோர்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தடையைப் பெற்றதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமான ஐ.பி.எல். தொடரில் சன்ரைஸர்ஸ் அணியை வழிநடாத்தவில்லை. இதன் போது, சன்ரைஸர்ஸ் அணி நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மூலம் வழிநடாத்தப்பட்டிருந்தது.
இம்முறை டேவிட் வோர்னர் மூலம் சன்ரைஸர்ஸ் அணி தலைமைதாங்கப்படவிருப்பதால் 2016 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவ்வணி காட்டிய அதே முடிவை இம்முறை பெறவும் எதிர்பார்க்கப்படுகின்றது. டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணியினர் கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.
இனி, டேவிட் வோர்னர் மூலம் வழிநடாத்தப்படவிருக்கும் சன்ரைஸர் அணி, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் தமது முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை ஏப்ரல் 1 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<