சமரி அத்தபத்துவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை இலகு வெற்றி

149

சசிகலா சிறிவர்தனவின் அபார பந்துவீச்சு மற்றும் சமரி அத்தபத்துவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஐ.சி.சி. பெண்கள் உலகக் கிண்ண டி20 போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை பெண்கள் அணி 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது. 

பெண்கள் உலகக் கிண்ண டி20 போட்டி அவுஸ்திரேலியாவில் வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையிலேயே அதில் பங்கேற்கும் அணிகள் பயிற்சிப் போட்டிகளில் ஆடி வருகின்றன.

உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை பெண்கள் தோல்வி

ஐ.சி.சி. பெண்கள் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடருக்கான முதலாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை பெண்கள் அணி தென்னாபிரிக்காவிடம் 41 ஓட்டங்களால் தோல்வியை …………..

இதில் இலங்கை அணி தனது முதல் பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் தோல்வியடைந்த நிலையில் இன்று (18) அடிலெயிட்டில் நடைபெற்ற இரண்டாவது பயிற்சிப் போட்டியில் பலம்கொண்ட இங்கிலாந்து பெண்களை எதிர்கொண்டது. 

11 வீராங்கனைகள் களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும் 15 வீராங்கனைகள் அணியில் இடம்பெற முடியும் என்ற விதியுடனேயே இந்தப் பயிற்சிப் போட்டிகள் நடைபெறுகின்றன. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு நெருக்கடி கொடுக்க இலங்கை பந்துவீச்சாளர்களால் முடிந்தது. குறிப்பாக, வலதுகை சுழற்பந்துவீச்சாளர் சிறிவர்தன இங்கிலாந்து ஆரம்ப விக்கெட்டுகளை பதம்பார்த்தார். 

இதனால், தடுமாற்றம் கண்ட இங்கிலாந்து மத்தியவரிசையும் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை தரைவார்த்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களையே பெற்றது. 

இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீராங்கனை எமி ஜோன்ஸ் மற்றும் டம்மி பிமொன்ட் தலா 23 ஓட்டங்களை பெற்றனர்.

உபுல் தரங்கவின் சதத்துடன் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை பதினொருவர்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் பயிற்சிப் ……..

இதன்போது அபாரமாக பந்துவீசிய சசிகலா சிறிவர்தன 4 ஓவர்களுக்கும் 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சமரி அத்தபத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். 

தொடர்ந்து இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை பெண்கள் அணி விக்கெட் இழப்பின்றி 12.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 123 ஓட்டங்களை எட்டியது.

துடுப்பாட்டத்திலும் அதிரடியாக ஆடிய சமரி அத்தபத்து 50 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றார். மறுபுறம் ஹாசினி மதூசிக்கா 25 பந்துகளில் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களை பெற்றார்.  

டி20 உலகக் கிண்ணத்தில் ஏ குழுவில் ஆடும் இலங்கை பெண்கள் அணி தனது முதல் போட்டியில் வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி பேர்த் வகா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து பெண்கள் – 122/9 (20) – எமி ஜோன்ஸ் 23, டம்மி பிமொன்ட் 23, சசிக்கலா சிறிவர்தன 4/22, சமரி அத்தபத்து 3/21

இலங்கை பெண்கள் – 120/0 (12.3) – சமரி அத்தபத்து 78*, ஹாசனி மதூசிக்கா 29*  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<