SLC தலைவர் பதினொருவர் அணியில் தரங்க, அசேல, திரிமான்ன

174

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட பயிற்சிப் போட்டிகளில் முதல் மோதலில் களமிறங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக் குழாம் இன்று (13) வெளியிடப்பட்டடுள்ளது. 

அத்துடன், அண்மையில் நிறைவுக்குவந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் பிராகாசித்த இளம் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணியில் வாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் குழாம் திங்கட்கிழமை (10) நாட்டை வந்தடைந்தது

இலங்கையுடன் மோதும் இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இலங்கை அணியுடன் மோதவுள்ள சுற்றுலா இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் இன்று (11) இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் எட். ஸ்மித்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்சமயம் தென்னாபிரிக்காவுக்கு ………

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 2 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளன.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக 2 பயிற்சிப் போட்டிகளில் அந்த அணி விளையாடவுள்ளது

இதன் முதலாவது பயிற்சிப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி பி. சரா ஓவல் மைதானத்திலும், இரண்டாவது பயிறிசிப் போட்டி 19ஆம் திகதி கட்டுநாயக்கவிலும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அனுபவமிக்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்

கடந்த 13 மாதங்களாக எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட அவர், உள்ளூர் மற்றும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கட்டுநாயக்கவில் நடைபெறவுள்ள இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணியின் தலைவராக லஹிரு திரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்

இறுதியாக, கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற்ற 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் தலைவராக அவர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை அணியின் மற்றுமொரு சகலதுறை வீரரான அசேல குணரத்னவுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் தொடர்ந்து பிரகாசித்து வருகின்ற பெதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட முதல்தர கழகங்களுக்கிடையிலான அழைப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் 39 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்த 26 வயதுடைய இளம் வீரரான சந்துன் வீரக்கொடி இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணியின் விக்கெட் காப்பாளராக செயற்படவுள்ளார்

இவர் இறுதியாக 2017ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தார்

இதேவேளை, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சில் அசத்திய இடதுகை வேகப் பந்துவீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மற்றும் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான கவிந்து நதீஷான் ஆகிய வீரர்கள் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணியில் முதல்தடவையாக இடம்பிடித்துள்ளனர்

ஹுங்கம விஜயபா தேசிய கல்லூரி மாணவனான டில்ஷான் மதுஷங்க, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்

இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் 18 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்ட பெரேரா, மாலிங்க

பிரபல கிரிக்கெட் விளையாட்டு இணையத்தளமான ……..

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவை அசித்த பெர்னாண்டோ வழிநடத்தவுள்ளார். இதில் ஷிரான் பெர்னாண்டோ, 20 வயதுடைய சாமிக்க குணசேகர ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர் 

அத்துடன், புலின தரங்க, சச்சிந்து கொலம்பகே, தரிந்து கௌஷால் மற்றும் கவிந்து நதீஷான் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளராக செயற்படவுள்ளனர்

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் குழாம்

உபுல் தரங்க (தலைவர்), லஹிரு திரிமான்ன, சந்துன் வீரக்கொடி, பெதும் நிஸ்ஸங்க, கவிந்து மெண்டிஸ், அசேல குணரத்ன, அஞ்செலோ பெரேரா, ஷான் பண்டார, அசித்த பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, சாமிக்க குணசேகர, புலின தரங்க, கவிந்து நதீஷான், சச்சிந்து கொலம்பகே, தரிந்து கௌஷால்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<