அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி

155

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அணியாக அமெரிக்கா கிரிக்கெட் அணி தம்மைப் பதிவு செய்துள்ளது. 

.சி.சியின் உலகக் கிண்ண லீக் கிரிக்கெட் 2 தொடரில் நேபாளத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அமெரிக்கா அணி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது.

ஒரு மணித்தியாலயம் 39 நிமிடங்களில் முடிந்த இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது

சச்சினின் அதிவேக ஒருநாள் அரைச்சத சாதனையை முந்திய நேபாள வீரர்

நேபாளம் கிரிக்கெட் அணியின் 15 வயதான ………

நேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகின்றது. இது .சி.சியின் உலகக் கிண்ண லீக் தொடரின் போட்டிகளாக  நடைபெற்று வருகிறது

கிர்திபூரில் நேற்று (12) நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம்அமெரிக்கா அணிகள் மோதின. இதன் நாணய சுழற்சியில் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் துடுப்பாடியது. 

அமெரிக்காவின் தொடக்க வீரர் மார்ஷல் மட்டும் தாக்குப்பிடித்து 16 ஓட்டங்களை எடுத்தார்

மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேற அமெரிக்கா அணி 35 ஓட்டங்களில் சுருண்டது. போட்டியில் அமெரிக்க அணி 12 ஓவர்கள் மாத்திரம் துடுப்பெடுத்தாடியிருந்தது.

இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஹராரேயில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்திருந்தது.

எனவே, சுமார் 14 வருடங்கள் பழமையான இந்த சாதனையை நேபாள அணிக்கெதிராக அமெரிக்கா அணி சமன் செய்துள்ளது. இலங்கை அணியுடனான போட்டியில் ஜிம்பாப்வே அணி 18 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தது.

அத்துடன், குறைந்த பந்துகளில் (104 பந்துகள்நிறைவடைந்த ஒருநாள் போட்டி என்ற வரிசையில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டது. அத்துடன் குறைந்த ஓவர்களில் முடிந்த போட்டிகள் வரிசையில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது

இந்தப் பட்டியலில் இடங்களில் கனடா (36), ஜிம்பாப்வே (38) மற்றும் இலங்கை (43) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன

நேபாளம் அணி சார்பில் சந்தீப் லாமிச்சேன் 6 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்

பின்னர் 36 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் அணி 5.2 ஓவரில் (32 பந்துகள்) 2 விக்கெட்டுகளை  இழந்து வெற்றி பெற்றது.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை இழந்த பும்ரா

இங்கிலாந்து – தென்னாபிரிக்கா மற்றும் இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்…………..

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி 11.09 மணிக்கு முடிந்து விட்டது. எனவே 50 ஓவர்கள் போட்டியொன்று ஒரு மணித்தியாலயம் 39 நிமிடத்திற்குள் முடிந்தது இதுவே முதல் முறையாகும்

ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் நிறைவுக்கு வந்த போட்டியாகவும் இது இடம்பிடித்தது.

 >>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<