இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தும், மூன்று நாட்கள் கொண்ட ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (9) ஐந்து போட்டிகள் நிறைவுக்கு வர, ஒரு போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
SSC அணிக்காக சதம் விளாசிய சந்துன் வீரக்கொடி
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும்,
இன்று இடம்பெற்று முடிந்த போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய முக்கிய வீரர்களில் ஒருவராக இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை வீரரான தசுன் ஷானக்க மாறினார். SSC அணிக்காக விளையாடிவரும் ஷானக்க, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 130 ஓட்டங்கள் குவித்து தனது 6ஆவது முதல்தரச் சதத்தினையும், முதல்தரப் போட்டிகளில் தன்னுடைய சிறந்த இன்னிங்ஸினையும் பதிவு செய்திருந்தார். எனினும், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் SSC அணிகள் விளையாடியிருந்த போட்டியானது சமநிலையில் நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், தசுன் ஷானக்க போன்று இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ, BRC அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் 93 ஓட்டங்கள் பெற்று சதத்தினை வெறும் ஏழு ஓட்டங்களால் தவறவிட்டிருந்தார். மேலும், பானுக்க ராஜபக்ஷ பெற்ற இந்த 93 ஓட்டங்கள் அவர் BRC அணிக்காக இப்போட்டியில் பெற்ற இரண்டாவது அரைச்சதமாகவும் அமைந்திருந்தது.
இராணுவப்படைக்காக ஆடும் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமாலும், இன்று சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அரைச்சதம் விளாசிய தினேஷ் சந்திமால் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 89 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் இராணுவப்படை அணிகள் மோதியிருந்த போட்டி, சமநிலையில் நிறைவடைந்தது.
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தவிர, உள்ளூர் வீரரான மனோஜ் சரசந்திர, இன்றைய நாளுக்கான ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சதம் பெற்ற துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார். அதன்படி, மனோஜ் சரசந்திர தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் இரண்டாம் இன்னிங்ஸில் 158 ஓட்டங்கள் எடுத்திருந்தார். எனினும், மனோஜ் சரச்சந்திர சதம் பெற்ற போட்டியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகமானது சிலாபம் மேரியன்ஸ் அணியிடம் 9 விக்கெட்டுக்களால் தோல்வியினை தழுவியது.
பந்துவீச்சாளர்களில் கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் வீரரான அஷான் பிரியஞ்சன் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் தலைவரான அஷான் பிரியஞ்சன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு குறித்த பந்துவீச்சு காரணமாக, கொழும்பு கிரிக்கெட் கழகம் 145 ஓட்டங்களால் BRC அணியினையினை வீழ்த்தியிருந்தது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சித்ர சேனநாயக்க ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான சச்சித்ர சேனநாயக்க சர்வதேச கிரிக்கெட்
அதேவேளை, இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளில் NCC – லங்கன் கிரிக்கெட் கழகம் இடையிலான மோதல் சமநிலையில் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளின் சுருக்கம்
றாகம கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்
சர்ரேய் மைதானம், மக்கோன
பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 505/9d (146.5) ப்ரவிஷ் ஷெட்டி 157*, லஹிரு மிலன்த 95, சலிந்த உஷான் 54, சிரான் பெர்னாந்து 2/45, சிரான் பெர்னாந்து 5/97
றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 28/2 (7)
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC
SSC மைதானம், கொழும்பு
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 428 (111.3) டில்சான் முனவீர 120, அஷேன் சில்வா 66, மதவ்வ வர்ணபுர 66, ரொஸ்கோ தட்டில் 51, தரிந்து ரத்னாயக்க 4/125, ஹிமேஷ் ராமநாயக்க 2/56
SSC (முதல் இன்னிங்ஸ்) – 409 (107.2) தசுன் ஷானக்க 130, சந்துன் வீரக்கொடி 114, கவிந்து குலசேகர 57, உபுல் இந்திரசிறி 5/110, ரொஷான் பெர்னாந்து 4/114
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 113/3 (23) டில்சான் முனவீர 49
முடிவு – போட்டி சமநிலையில் அடைந்தது
NCC எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்
NCC மைதானம், கொழும்பு
NCC (முதல் இன்னிங்ஸ்) – 511/9d (107.2) பெதும் நிஸ்ஸங்க 129, உபுல் தரங்க 69, சஹான் ஆராச்சிகே 64, சாமிக்க கருணாரத்ன 63, அஞ்சலோ பெரேரா 51, சானக்க ருவன்சிரி 3/57
லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 394 (133.2) கீத் குமார 70, ப்ரிமோஷ் பெரேரா 66, சானக்க ருவன்சிரி 51, சஹான் ஆராச்சிகே 3/84
NCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 102/0 (15.1) லஹிரு உதார 56*, மஹேல உடவத்த 42*
முடிவு – போட்டி சமநிலையில் முடிவடைந்தது
Photos: NCC Vs Lankan CC – Major League Tier A Tournament 2019/20
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 270 (89.3) அசேல குணரத்ன 87, ஹிமாஷ லியனகே 73, தினேஷ் சந்திமல் 44, டில்ருவான் பெரேரா 5/58
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 336/9 (100) விஷாத் ரன்திக்க 132, அவிஷ்க பெர்னாந்து 41, மால்க மதுசன்க 3/83
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 268 (68.4) தினேஷ் சந்திமால் 89, ஜனித் சில்வா 37, தில்ருவான் பெரேரா 3/62, பிரபாத் ஜயசூரிய 3/100
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.
Photos: Colts CC Vs Army SC | Major League Tier A Tournament 2019/20
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC
BRC மைதானம், கொழும்பு
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 416 (77.1) மினோத் பானுக்க 108, ரொன் சந்திரகுப்தா 95, துவிந்து திலகரட்ன 6/102, தரிந்து கெளஷால் 4/125
BRC (முதல் இன்னிங்ஸ்) – 277 (65.2) பானுக்க ராஜபக்ஷ 85, சாகர் மங்லோக்கர் 52, மலிந்த புஷ்பகுமார 4/63, அஷான் பிரியஞ்சன் 3/58
கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 267/6d (52) பவன்த வீரசிங்க 82, துவிந்து திலகரட்ன 4/93
BRC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 261 (67.5) பானுக்க ராஜபக்ஷ 93, அஷான் பிரியஞ்சன் 5/42
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 145 ஓட்டங்களால் வெற்றி
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
பி. சரவணமுத்து மைதானம், கொழும்பு
Photos: Tamil Union C & AC Vs Chilaw Marians CC – Major League Tier A Tournament 2019/20
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 162 (63.2) தரங்க பரணவிதான 45, அசித்த பெர்னாந்து 5/50, திக்ஷில டி சில்வா 4/42
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 346 (87.1) கமிந்து மெண்டிஸ் 73, திக்ஷில டி சில்வா 58, சுரங்க லக்மால் 5/79, மதுக்க லியனபத்திரனகே 3/99
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 298 (76.2) மனோஜ் சரச்சந்திர 158, அசித்த பெர்னாந்து 4/92
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 116/1 (17) சுமித் காடியோங்கார் 55*, ஒசத பெர்னாந்து 30*,
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுக்களால் வெற்றி
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க