நிப்ராஸ், இஹ்கான், அஸார்தீன் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு யங் ஹீரோஸ் வெற்றி

201

கிழக்கு மாகாண டிவிஷன் – II கிரிக்கெட் கழகங்கள் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இன்று (8) நிறைவுக்கு வந்த போட்டியொன்றில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகத்தினை 63 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. 

மட்டக்களப்பு சிவானந்த மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, லக்கி அணியின் தலைவர் சஞ்சீவ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை யங் ஹீரோஸ் வீரர்களுக்கு வழங்கினார். 

யங் ஹீரோஸ் வீரர்களை வீழ்த்திய சிவனாந்த அணி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) கிழக்கு மாகாண உள்ளூர் கழகங்கள் இடையே….

தொடர்ந்து, நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த நிப்ராஸ் மற்றும் அஸார்தீன் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தினை வழங்கினர்.

இதில் வெறும், 69 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட நிப்ராஸ் சதம் விளாசி 18 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 108 ஓட்டங்களைக் குவித்தார். அதேநேரம், அதிரடி அரைச்சதம் பெற்ற அஸார்தீன் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 23 பந்துகளுக்கு 50 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடதக்கது. 

இந்த இரண்டு வீரர்கள் தவிர மத்திய வரிசையில் துடுப்பாடிய முஜிபுர் ரஹ்மானும் பெறுமதியான ஆட்டத்தினை வெளிப்படுத்த, யங் ஹீரோஸ் அணியினர் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 312 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். 

Photo Album : Intra Provincial Cricket Tournament 2019 – Division II | Eravur YHSC Vs Batticaloa Lucky SC

யங் ஹீரோஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக, மத்திய வரிசையில் களம் வந்து துடுப்பாடிய முஜிபுர் ரஹ்மான் 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், லக்கி விளையாட்டுக் கழக அணியின் பந்துவீச்சு சார்பில் மேனகாந்தன் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அணித்தலைவர் சஞ்சீவ் மற்றும் பிரஷாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 313 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய லக்கி அணி 35 ஓவர்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியைத் தழுவியது. 

லக்கி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் சஞ்சீவ் 20 பௌண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கலாக 72 பந்துகளுக்கு 133 ஓட்டங்கள் பெற்று சதம் விளாசி போராட்டம் காண்பித்த போதும் அவரின் துடுப்பாட்டம் வீணாகியிருந்தது. 

பிக் பேஷ் லீக் சம்பியனாக மகுடம் சூடியது சிட்னி சிக்ஸர்ஸ்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக் பேஷ் லீக் (BBL) தொடரின் இறுதிப் போட்டியில்….

அதேநேரம், யங் ஹீரோஸ் அணியின் வெற்றியினை வேகப்பந்துவீச்சாளரான இஹ்கான் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி உறுதி செய்ய, நவ்சாத் 3 விக்கெட்டுக்களுடனும், பாசில் 2 விக்கெட்டுக்களுடனும் தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்தனர். 

இந்த வெற்றியோடு ஏறாவூர் யங் ஹீரோஸ் அணி, கிழக்கு மாகாண டிவிஷன் – II கிரிக்கெட் கழகங்கள் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியினைப் பதிவு செய்து கொண்டது. 

போட்டியின் சுருக்கம்

லக்கி விளையாட்டுக் கழகம் – 249 (35) – சஞ்சீவ் 133, இஹ்கான் 304, நவ்சாத் 483, பாஷில் 432

யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 312 (49.2) – நிப்ராஸ் 108, அஸார்தீன் 50, முஜிபுர் ரஹ்மான் 45, மேனகாந்தன் 493, பிரசாந்த் 362, சஞ்சீவ் 462

முடிவு – யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 63 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<