நுவான் குலசேகரவின் டி20 உலக சாதனையை முறியடித்த பும்ரா

110

டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டமற்ற ஓவர்களை வீசிய வீரர்கள் வரிசையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நுவான் குலசேகரவின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜெஸ்பிரிட் பும்ரா முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுகிறது. முதல் தொடரான டி20 சர்வதேச தொடர் நேற்றுடன் (02) நிறைவுக்கு வந்துள்ள நிலையில் தொடரை இந்திய அணி 5-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்தை வைட் வொஷ் செய்தது இந்தியா

நியூசிலாந்து அணி 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்…

இப்போட்டியில் 164 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 7 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் இரண்டாவது ஓவரில் நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

தனது முதல் ஓவரை வீசுவதற்காக அழைக்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் ஜெஸ்பிரிட் பும்ரா குறித்த ஓவரின் மூன்றாவது பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் குப்டிலை ஆட்டமிழக்க செய்தார். அதனை தொடர்ந்துவந்த விக்கெட் காப்பாளர் டிம் சைப்ரெட் அடுத்தடுத்த மூன்று பந்துகளையும் டொட் (ஓட்டமின்றி தடுத்தாட) செய்ய குறித்த ஓவர் ஓட்டமற்ற ஓவராக பதிவாகியது.

ஜெஸ்பிரிட் பும்ரா இவ்வாறு ஓட்டமற்ற ஓவரை பதிவு செய்ததன் மூலம் டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 49 இன்னிங்ஸ்களில் 7 தடவைகள், அதாவது 7 ஓட்டமற்ற ஓவர்களை வீசி அதிக ஓட்டமற்ற ஓவர்களை வீசிய வீரராக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான நுவான் குலசேகர 58 இன்னிங்ஸ்களில் 6 தடவைகள் ஓட்டமற்ற ஓவர்களை வீசி குறித்த பட்டியலில் முதலிடத்தில் காணப்பட்டார். 

அபார சதத்தின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய குசல் மெண்டிஸ்

இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை எதிர் ஜிம்பாப்வே…

டி20 சர்வதேச வரலாற்றில் அதிக ஓட்டமற்ற ஓவர்களை வீசிய வீரர்கள். (முதல் ஐந்து நிலைகள்)

  1. ஜெஸ்பிரிட் பும்ரா (இந்தியா) – 7 ஓவர்கள் (49 இன்னிங்ஸ்கள்)
  2. நுவான் குலசேகர (இலங்கை) – 6 ஓவர்கள் (58 இன்னிங்ஸ்கள்)
  3. ஹர்பஜன் சிங் (இந்தியா) – 5 ஓவர்கள் (27 இன்னிங்ஸ்கள்)
  4. ட்ரெண்ட் ஜோன்ஸ்ட்டன் (அயர்லாந்து) – 5 ஓவர்கள் (28 இன்னிங்ஸ்கள்)
  5. அஜந்த மெண்டிஸ் (இலங்கை) – 5 ஓவர்கள் (39 இன்னிங்ஸ்கள்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<