பாகிஸ்தானை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

146
Bangladesh Cricket
BCB

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்;ட பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 

பங்களாதேஷ் தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள

பாகிஸ்தானில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுகிறது. முதல் தொடரான டி20 சர்வதேச தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது தங்களது குழாத்தினை வெளியிட்டுள்ளது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் கடந்த 2019 நவம்பரில் இந்திய கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி தொடரில் 2-0 என்ற அடிப்படையில் இழந்திருந்தது. குறித்த தொடரில் விளையாடிய குழாத்திலிருந்து ஆறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அனுபவ விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான முஷ்பிகூர் ரஹீம் பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி பாகிஸ்தான் செல்ல மறுத்திருந்த நிலையில் டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் அடிப்படையில் இளம் வீரர் மொமினுல் ஹக் பெயரிடப்பட்டுள்ளார். 

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸ், மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சத்மன் இஸ்லாம், சகலதுறை வீரரான மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் துடுப்பாட்ட சகலதுறை வீரரான மொஸாதீக் ஹொஸைன் ஆகிய நான்கு வீரர்கள் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதன் காரணமாக பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர். 

இதேவேளை, பங்களாதேஷ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான முஸ்தபீசுர் ரஹ்மான் அண்மைகாலமாக டெஸ்ட் அணியில் பிரகாசிக்க தவறியுள்ளார் என்ற அடிப்படையில் தொடர்ந்தும் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக 2019 மார்ச் மாதம் நியூசிலாந்து அணியுடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு முக்கிய வீரர்கள் குழாமில் இடம்பெற தவறியுள்ள நிலையில் ஏனைய பல முக்கிய அனுபவ வீரர்களுக்கு குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமீம் இக்பால் இறுதியாக 2019 மார்ச்சில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிதன் பின்னர் மீண்டும் பங்களாதேஷ் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். தமீம் இக்பாலின் வருகை பங்களாதேஷ் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலமாக அமைந்துள்ளது.

மேலும், மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 26 வயதுடைய இளம் வீரர் சௌமியா சர்கார் இறுதியாக 2019 செப்டம்பரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியதன் பின்னர் மீண்டும் டெஸ்ட் குழாமுக்கு திரும்பியுள்ளார். பங்களாதேஷ் அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வேகப்  பந்துவீச்சாளர் ரூபல் ஹுஸைன் ஒன்றரை வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அடிப்படையில் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

நேபாளத்தில் கிரிக்கெட் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட உபுல் தரங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரான உபுல் தரங்க

அத்துடன் கடந்த 2017 ஜனவரியில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் அறிமுகம் பெற்று மீண்டும் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியின் பின்னர் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில் வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் காணப்பட்ட 21 வயதுடைய இளம் துடுப்பட்ட வீரர் நஜ்முல் ஹுஸைன் சான்டோ மீண்டும் ஒரு வருடத்தின் பின்னர் பங்களாதேஷ் டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளார்.  

வெளியிடப்பட்டுள்ள பங்களாதேஷ் குழாமில் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள், இரண்டு விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்கள், ஒரு சகலதுறை வீரர் மற்றும் ஆறு பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார். 

பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மொமினுல் ஹக் தலைமையிலான பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் நாளை மறுதினம் (04) பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளது. 

பங்களாதேஷ் டெஸ்ட் குழாம்.

மொமினுல் ஹக் (அணித்தலைவர்), தமீம் இக்பால், சைப் ஹஸன், நஜ்முல் ஹுஸைன் சான்டோ, மஹ்மதுல்லாஹ் ரியாத், மொஹமட் மித்துன், லிட்டன் தாஸ், தைஜூல் இஸ்லாம், நயீம் ஹஸன், எபாதத் ஹுஸைன், அபூ ஜெயித் சௌத்திரி ராஹி, அல் அமீன் ஹுஸைன், ரூபல் ஹுஸைன், சௌமியா சர்கார் 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க