இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A (Tier A) உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (31) ஆரம்பமாகியது.
மூன்று நாட்களுக்குரிய போட்டிகளை கொண்டிருக்கும் இந்த தொடரில் நேற்று மூன்று போட்டிகள் ஆரம்பமாகி இன்று (1), குறித்த போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக சதம் விளாசிய மினோத் பானுக்க
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் அணிகள் …
இன்று நிறைவடைந்த போட்டிகளில் இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்திருந்தனர். இதில் சோனகர் கிரிக்கெட் கழகத்திற்காக தொடரின் முதல் நாளில் இரட்டைச்சதம் பெற்ற வலதுகை துடுப்பாட்ட வீரரான ரமேஷ் மெண்டிஸ் இன்று முச்சதம் பூர்த்தி செய்து சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினார். மொத்தமாக, 300 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த ரமேஷ் மெண்டிஸ் முதல் தரப் போட்டிகளில் தான் பெற்ற கூடிய ஓட்டங்களையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், ரமேஷ் மெண்டிஸின் முச்சதத்தோடு, சோனகர் கிரிக்கெட் கழக அணி நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான மோதலில் தமது முதல் இன்னிங்ஸிற்காக 652 ஓட்டங்களை எடுத்தது. சோனகர் கிரிக்கெட் கழகத்தினை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் நீர்கொழும்பு அணி போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் 302 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. இம்முறை ஏற்கனவே துடுப்பாட்டத்தில் அசத்திய ரமேஷ் மெண்டிஸ் நீர்கொழும்பு அணியின் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்து சகலதுறைகளிலும் அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரமேஷ் மெண்டிஸ் ஒருபுறமிருக்க, இலங்கை இராணுவப்படை அணிக்காக நீண்ட காலத்திற்கு பின்னர் விளையாடிவரும் அசேல குணரத்ன இன்று அரைச்சதம் பெற்று 82 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இந்த துடுப்பாட்ட உதவியோடு இராணுவப்படை கிரிக்கெட் கழகம் BRC அணிக்கு எதிரான மோதலில் தமது முதல் இன்னிங்ஸிற்காக 435 ஓட்டங்கள் பெற்றது. இராணுவப்படை வீரர்களை அடுத்து தமது முதல் இன்னிங்ஸினை ஆரம்பித்த BRC அணியினர் துஷான் விமுக்தியின் சுழல் பந்துவீச்சு காரணமாக வெறும் 88 ஓட்டங்களுக்கு சுருண்டனர். சிறந்த முறையில் செயற்பட்ட துஷான் விமுக்தி 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். தொடர்ந்து, பலோவ் ஒன் (follow on) முறையில் துடுப்பாடி வரும் BRC அணி, போட்டியின் இரண்டாம் நாள் நிறைவுக்கு வரும் போது 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
மெண்டிஸின் அபார சதத்தால் தொடர் வெற்றி இலங்கை வசம்!
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான…
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடதுகை சுழல் பந்து வீச்சாளரான மலிந்த புஷ்பகுமார, இன்றைய நாளுக்கான போட்டிகளில் ஜொலித்திருந்தார். அந்தவகையில், கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடும் புஷ்குமார SSC அணிக்கு எதிராக 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் போட்டிகளின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC
- இடம் – கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 548 (119) – லசித் அபேரத்ன 153, மினோத் பானுக்க 114, அஷான் பிரியஞ்சன் 90, ஆகாஷ் சேனாரத்ன 4/120, சரித் அசலங்க 2/53
SSC (முதல் இன்னிங்ஸ்) – 234/7 (61) கவிந்து குலசேகர 84, பசிந்து சூரியபண்டார 48, மலிந்த புஷ்பகுமார 3/52, உஸ்மான் இஷாக் 2/58
சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்
- இடம் – சோனகர் கிரிக்கெட் கழக மைதானம்
சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 652/8d (109.1) – ரமேஷ் மெண்டிஸ் 300*, சசித்ர சேரசிங்க 149, நிமன்த மதுசங்க 90, ரொஷேன பெர்னாந்து 3/101, சாட் நஸீம் 3/197
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 302/9 (68) – ரொஸ்கோ தட்டில் 77, சாத் நஸீம் 58, சசித்ர சேரசிங்க 3/66
இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் BRC
- இடம் – டொம்பேகொட சர்வதேச மைதானம்
இராணுவப்படை (முதல் இன்னிங்ஸ்) – 435 (125.4) – லக்ஷான் எதிரிசிங்க 99, அசேல குணரத்ன 82, துவிந்து திலகரட்ன 4/80
BRC (முதல் இன்னிங்ஸ்) – 88 (25.5) – துஷான் விமுக்தி 5/21
BRC (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 59/2 (16.4) – சாகர் மங்களோக்கர் 36*
இன்றைய போட்டிகளின் மூன்றாம் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<