தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி

194

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டு தொடரை கைப்பற்றியது. 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்து வசம்

போட்டியின் போது, பெப் டு ப்ளெசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்களை வீசிமுடிக்க தவறியுள்ளது. இதனை அவதானித்த நடுவர்கள் போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்ட பின்னர், போட்டி மத்தியஸ்தரான எண்டி பைக்ரொப்ட் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

நடுவர்கள் முறையீட்டின் அடிப்படையிலும், பெப் டு ப்ளெசிஸிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்க அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான விதிமுறைகளின் படி, அணியானது குறித்த நேரத்தில் ஓவர்களை நிறைவுசெய்ய தவறினால், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் இருந்து ஓவருக்கு தலா 2 புள்ளிகள் வீதம் குறைக்கப்படும். அதன்படி, மூன்று ஓவர்கள் வீசத் தவறிய தென்னாபிரி க்க அணிக்கு, 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் 30 புள்ளிகளை பெற்றிருந்த தென்னாபிரிக்க அணிக்கு, தற்போது 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், அந்த அணி 24 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<